close
Choose your channels

'லியோ' படத்தில் இணைந்த மேலும் ஒரு வில்லன்.. இன்னும் எத்தனை பேரு தான் இருக்கிங்க..?

Thursday, March 16, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் நடித்து வரும் 'லியோ’ திரைப்படத்தில் ஏற்கனவே அரை டஜனுக்கு மேலாக வில்லன் நடிகர்கள் நடித்து வருகின்றனர் என்பதும் கிட்டத்தட்ட அனைவருமே பிரபலமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு வில்லன் நடிகர் இந்த படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

விஜய் ஹீரோவாக நடித்து வரும் 'லியோ’ திரைப்படத்தில் சஞ்சய் தத், மிஷ்கின், அர்ஜுன், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், பாபு ஆண்டனி உள்ளிட்டோர் வில்லன்களாக நடித்து வருவதாகவும் அனைவருக்குமே படத்தின் கதையில் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது வில்லன் நடிகர் மதுசூதனன் இந்த படத்தில் இணைந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் அவர் ’டாணாக்காரன்’ ’எதற்கும் துணிந்தவன்’ ’அரண்மனை 3’ உள்பட பல திரைப்படங்களில் வில்லன் வேடத்தில் நடித்துள்ள நிலையில் தற்போது 'லியோ’ படத்திலும் அவர் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காஷ்மீரில் தற்போது விஜய், சஞ்சய்தத் மற்றும் பாபு ஆண்டனி சம்பந்தப்பட்ட ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும், இந்த ஸ்டண்ட் காட்சிகளை அன்பறிவ் அமைத்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் காஷ்மீர் படப்பிடிப்பு மார்ச் 24 ஆம் தேதி முடிவடையும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் இணைந்த மதுசூதனன் விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மாத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் லலித தயாரித்து வருகிறார். அனிருத் இசையில் பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.