close
Choose your channels

லண்டனில் திடீரென காணாமல் போன 'ஜகமே தந்திரம்' நடிகர்: படப்பிடிப்பின்போது நடந்த பதட்டம்!

Tuesday, June 15, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்த ;ஜகமே தந்திரம்; திரைப்படம் வரும் 18ஆம் தேதி ஓடிடியில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்த ஷரத் ரவி என்பவர் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் இந்த படத்தில் நடித்தபோது கிடைத்த அனுபவம் குறித்து மனம் பகிர்ந்து கொண்டார்.

இந்த படத்தின் படப்பிடிப்பின்போது தனக்கு ஒரு நாள் விடுமுறை கிடைத்ததாகவும், இதனை அடுத்து தான் லண்டனில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் பெருமாள் கோவிலில் இருப்பதை அறிந்து அங்கு சென்றதாகவும், ஆனால் படக்குழுவினர் அனைவரும் தன்னை காணவில்லை என்று தேடிக் கொண்டிருந்ததாகவும் அதன்பின் தனக்கு போன் செய்து ’நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? என்று கேட்டபோது நான் பெருமாள் கோயிலுக்கு வந்து இருக்கேன் என்று சொன்னதும் தான் அனைவரும் நிம்மதி அடைந்தனர் என்றும் தெரிவித்தார்.

மேலும் இந்த படத்தில் தனுஷுடன் நடித்த அனுபவங்கள் மறக்கவே முடியாது என்றும் தனுஷ் இந்த திரைப்படத்தில் சூப்பராக நடித்திருப்பார் என்றும் அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார். இந்த பேட்டியின் முழு வீடியோ இதோ:

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.