படம் முழுவதும் விஜய்க்கு ஒரே ஒரு காஸ்ட்யூம் தானா? ரசிகர்கள் ஆச்சரியம்


Send us your feedback to audioarticles@vaarta.com


தளபதி விஜய் நடித்துள்ள ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படம் குறித்த செய்திகள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் கசிந்து வரும் நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் செய்தி விஜய் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
இந்த படத்தின் வெளிநாட்டு காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகளை தவிர படம் முழுவதும் விஜய்க்கு ஒரே ஒரு காஸ்ட்யூம் மட்டுமே பயன்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் 75 சதவீத காட்சிகள் மால் ஒன்றில் படமாக்கப்பட்டுள்ளதை அடுத்து அந்த மால் காட்சிகள் முழுவதிலுமே விஜய் வெள்ளை சட்டை மற்றும் வெள்ளை பனியன் மட்டுமே அணிந்து நடித்துள்ளதாகவும், படம் முடியும் வரை விஜய்க்கு அந்த ஒரு காஸ்ட்யூம் மட்டுமே என்றும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் படத்தில் இதுவரை இல்லாத வகையில் படத்தின் 75 சதவிகித காட்சிகளில் ஒரே ஒரு காஸ்ட்யூம் மட்டுமே அணிந்து விஜய் நடித்து இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments