சென்னையின் முக்கிய திரையரங்கில் டிக்கெட் கட்டணம் ரூ.99 மட்டுமே: அதிரடி அறிவிப்பு!

  • IndiaGlitz, [Thursday,August 11 2022]

சென்னையின் முக்கிய திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம் வெறும் ரூபாய் 99 மட்டுமே என அதிரடியாக அறிவிக்கப்பட்டு உள்ளதால் சினிமா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம் ஜிஎஸ்டி வரி, ஆன்லைன் புக்கிங் கட்டணம் சேர்த்து ரூ.180 முதல் ரூ.200 வரை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னையின் முக்கிய திரையரங்குகளில் ஒன்றான கமலா தியேட்டரில் 99 ரூபாய் டிக்கெட் கட்டணம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த சலுகை ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை மட்டுமே உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு வாரமும் புதன் கிழமைகளில் சென்னை கமலா தியேட்டரில் 99 ரூபாய் டிக்கெட் கட்டணம் செலுத்தி திரைப்படம் பார்க்கலாம் என்ற அறிவிப்பு சினிமா ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விடுமுறை நாட்கள் அல்லாத வார நாட்களில் குறைந்த கட்டணத்தை திரையரங்குகள் வசூல் செய்ய வேண்டுமென்றும் அவ்வாறு வசூல் செய்தால் அதிக பார்வையாளர்கள் திரையரங்குகளுக்கு வர வாய்ப்பிருப்பதாகவும் ஏற்கனவே திரையுலக பிரபலங்கள் பலர் கூறி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சூர்யாவை முந்திய கீர்த்தி சுரேஷ்: சுதா கொங்கராவின் அதிரடி திட்டம்!

தேசிய விருது பெற்ற இயக்குனர் சுதா கொங்கரா தற்போது 'சூரரைப்போற்று' திரைப்படத்தின்  ஹிந்தி பதிப்பை இயக்கி வருகிறார் என்பது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

'ஜெய்பீம்' வழக்கு: நடிகர் சூர்யா குறித்து சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு!

'ஜெய்பீம்' பட விவகாரம் குறித்து சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேல் மீது சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் இந்த வழக்கு குறித்து முக்கிய உத்தரவை சென்னை ஐகோர்ட் பிறப்பித்துள்ளது.

பிக்பாஸ் பாவனிக்கு தாலி கட்டிய அமிர்: விஜய் நடத்திய திருமணம்!

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் போதே அமீர் மற்றும் பாவனி ரெட்டி காதலிப்பதாக கூறப்பட்ட நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னரும் இந்த காதல் தொடர்ந்ததாக தெரிந்தது.

படப்பிடிப்பின்போது விஷாலுக்கு மீண்டும் காயம்: மருத்துவமனையில் அனுமதி!

விஷால் நடித்த 'லத்தி' படத்தின் படப்பிடிப்பின்போது ஏற்கனவே இரண்டு முறை அவருக்கு காயம் ஏற்பட்ட நிலையில், காயத்தில் இருந்து மீண்ட அவருக்கு தற்போது மீண்டும் 'மார்க் ஆண்டனி' படத்தின் படப்பிடிப்பின்

'கோச்சடையான்' பட வழக்கு: லதா ரஜினிகாந்த் குறித்து முக்கிய உத்தரவு பிறப்பித்த கர்நாடகா ஐகோர்ட்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அவரது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான 'கோச்சடையான்' பட வழக்கு குறித்து கர்நாடக ஐகோர்ட் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.