'ஆபரேஷன் சிந்தூர்' பெயரில் ஒரு திரைப்பட போஸ்டர்.. சில நிமிடங்களில் நீக்கியது ஏன்?


Send us your feedback to audioarticles@vaarta.com


’ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் ஒரு திரைப்படத்தின் போஸ்டர் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்ட நிலையில், சில நிமிடங்களில் அந்த போஸ்டர் நீக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தானின் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய ராணுவம் ’ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்களை அழித்தது. இதனை அடுத்து, ’ஆபரேஷன் சிந்தூர்’ பெயர் உலக அளவில் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் திடீரென சமூக வலைதளங்களில் ’ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாக போஸ்டர் வெளியானது. அந்த போஸ்டரில், ராணுவ சீருடையில் ஒரு பெண் அதிகாரி இருப்பது போலவும், அவர் ஒரு கையில் துப்பாக்கியையும் இன்னொரு கையால் தனது நெற்றியில் பொட்டு வைத்துக் கொண்டிருப்பது போன்றும் இடம் பெற்றிருந்தது. ஆனால் அந்த பெண்ணின் முகம் இந்த போஸ்டரில் தெரியவில்லை.
இந்த போஸ்டர் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், இந்த படத்தை விக்கி பக்லானி பிலிம்ஸ் மற்றும் தி கண்டன்ட் இன்ஜினியரிங் நிறுவனங்கள் தயாரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த போஸ்டருக்கு சமூக வலைதளங்களில் கலையான உபசாரம் செய்யப்பட்டது. அடுத்து திடீரென சில நிமிடங்களில் போஸ்டர் நீக்கப்பட்டது.
போஸ்டர் நீக்கப்பட்டதற்கு அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியிடவில்லை என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போஸ்டர் நீக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே ’ஆபரேஷன் சிந்தூர்’ என்ற டைட்டிலை பெறுவதற்காக பாலிவுட்டில் பலர் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments