ஆவின் பாலில் சர்க்கரைத் தண்ணீர் கலந்து மோசடி… வெளியான அதிர்ச்சி வீடியோ!!!

  • IndiaGlitz, [Wednesday,December 02 2020]

 

திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து ஆவின் பால் நிறுவனத்திற்கு அனுப்பப்படும் பசும்பாலில் அம்மாவட்டத்தின் கூட்டுறவு சங்கத் தலைவரே சர்க்கரைத் தண்ணீர் கலந்து அனுப்புவது போன்ற அதிர்ச்சி வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. தான் வாடிக்கையாளர்களிடம் இருந்து சேகரித்த பாலை ஆவின் நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கும்போது கேன்களில் இருந்து பாலை எடுத்துக் கொண்டு அதற்கு பதிலாக சர்க்கரை கலந்த தண்ணீரை சேர்த்து விடுவதும் அந்த வீடியோவில் அம்பலமாகி இருக்கிறது. இதற்கு ஆவின் நிர்வாகத்தின் ஓட்டுநரும் உடந்தையாக இருந்திருக்கிறார்.

அம்மாவட்டத்தின் சாவல்பூண்டி ஊராட்சி பகுதியில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இதற்கு சொந்தக் கட்டிடம் இல்லாததால் தனது வீட்டில் உள்ள பெட்டிக்கடையில் வைத்து சங்கத்தின் செயலாளர் புஷ்பநாதன் கூட்டுறவு சங்கத்தை நடத்தி வருகிறார். இதில் உறுப்பினர்களாக 150 க்கும் மேற்பட்டோர் செயல்பட்டு வருகின்றனர். இந்த கிளையில் இருந்து நாள்தோறும் 500 முதல் 600 லிட்டர் பாலை ஆவின் நிர்வாகத்திற்கு வழங்கி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆவின் நிர்வாகத்திற்கு பால் கேன்களை எடுத்துச் செல்லும் ஓட்டுநருடன் சேர்ந்துகொண்டு ஒவ்வொரு கேனிலும் 4 லிட்டர் அளவுக்கு பாலை எடுத்து மோசடி செய்தது தெரியவந்துள்ளது. மேலும் பாலுக்கு பதிலாக சர்க்கரைத் தண்ணீரை கலந்து முறைகேட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். இப்படி நாள்தோறும் 80 லிட்டர் முதல் 120 லிட்டர் வரை பாலை எடுத்து விற்பனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பான காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

More News

கொரோனா வைரஸ் மூக்கு வழியாக மூளைக்குள் நுழைகிறதா??? பதைக்க வைக்கும் தகவல்!!!

தற்போதுவரை கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் நடைமுறையில் இருந்தாலும் கொரோனா பாதிப்பு பற்றிய அச்சம் இல்லாமலே பெரும்பாலான பொதுமக்கள் இயல்பான வாழ்க்கையை வாழத் தொடங்கி விட்டனர்.

ரஜினி அரசியலுக்கு வருவாரா? தமிழருவிமணியன் பரபரப்பு பேட்டி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்த நிலையில் விரைவில் அவர் அரசியலுக்கு வருவாரா?

வித்யாபாலனை இரவு விருந்துக்கு அழைத்தாரா அமைச்சர்? திடுக்கிடும் தகவல்!

பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலனை மத்திய பிரதேச மாநில அமைச்சர் ஒருவர் இரவு விருந்துக்கு அழைத்ததாக வெளிவந்த தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

பாமக மட்டுமல்ல.. பட்டியல், பழங்குடி இனத்தவருக்கும் இடஒதுக்கீடு… முதல்வரின் தொலைநோக்கு திட்டம்!!!

தமிழகத்தில் சாதி வாரியான புள்ளி விவரங்களை சேகரிக்கும் விதிமுறைகளை ஆராய்ந்து அதன் அடிப்படையில் உரிய தரவுகளை சேகரித்து

திமிங்கலத்தின் வாந்தியால் ரூ.25 கோடிக்கு சொந்தக்காரரான மீனவன்… நெகிழ்ச்சி சம்பவம்!!!

வாந்தி என்ற சொல்லை நினைத்தாலே எல்லோருக்கும் குமட்டிக் கொண்டுதான் வரும். ஆனால் தாய்லாந்து நாட்டில் உள்ள ஒரு மீனவன்