ஓபிஎஸ்-க்கு எதிராக போயஸ் கார்டனில் ஆர்ப்பாட்டம். உருவ பொம்மை எரிக்க முயற்சி

  • IndiaGlitz, [Thursday,February 09 2017]

சென்னை மெரீனாவில் தமிழக முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் தனது உள்ளக்குமுறல்களை வெளிப்படுத்திய வினாடியில் இருந்து தமிழக அரசியல் சூழ்நிலை முற்றிலும் மாறிவிட்டது. ஆட்சியை பிடிக்க சசிகலா தலைமையில் ஒரு அணியும், முதல்வர் ஓபிஎஸ் தலைமையில் ஒரு அணியும் தீவிர முயற்சியில் உள்ளனர்.

இந்நிலையில் ஓபிஎஸ் ஊடகங்களில் அடுத்தடுத்து பல்வேறு அதிரடி கருத்துக்களை தெரிவித்து பேட்டி அளித்து வருகிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த சசிகலா ஆதரவு அதிமுகவினர் சென்னை போயஸ் கார்டனில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும் ஓபிஎஸ் அவர்களுக்கு எதிராக சசிகலா ஆதரவு அதிமுகவினர் கோஷம் எழுப்பி வருவதாகவும், முதல்வரின் உருவ பொம்மையை எரிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவும், காவல்துறையினரால் அது தடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

More News

கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்பிக்கள் அமளி. இரு அவைகளும் ஒத்திவைப்பு

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களால் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள சசிகலாவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கும் வகையில் உடனடியாக பொறுப்பு ஆளுனர் வித்யாசாகர்ராவ், தமிழகம் திரும்ப வேண்டும் என்பதை வலியுறுத்தி அதிமுக எம்பிக்கள் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அமளி செய்து வருகின்றனர்...

முதல்வர் கடிதம் கிடைத்ததும் வங்கி கணக்கு முடக்கப்படும். பேங்க் ஆப் இந்தியா மேலாளர் அதிரடி

அதிமுக பொருளாளராக இருக்கும் தன்னை நீக்க தற்காலிக பொதுசெயலாளருக்கு அதிகாரம் இல்லை என்றும், தான் இன்னும் பொருளாளராகவே தொடர்வதால் தன்னுடைய அனுமதியின்றி ஒரு ரூபாய் அதிமுக வங்கிக்கணக்கில் பணம் எடுக்க அனுமதிக்ககூடாது என்றும் அதிமுக பொருளாளரும் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று வங்கி அதிகாரிக்க்கு கடிதம் எழுதியிருந்தார

கனடாவுக்கு வாருங்கள். டொரண்டோ மேயர் அழைப்புக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் பதில்

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் சமீபத்தில் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள கனடா தலைநகர் டொரண்டோ சென்றிருந்தார். இந்த நிகழ்ச்சியில் டொரண்டோ மேயர் ஜான் டிராய் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்...

முதல்வர் ஓபிஸ்-ஐ சந்தித்த தலைமைச்செயலாளர்-டிஜிபி. திடீர் திருப்பம் ஏற்படுமா?

தமிழக முதல்வர் ஓபிஎஸ் அவர்களை அவரது இல்லத்தில் சற்று முன்னர் தமிழக தலைமைச்செயலாலர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் டிஜிபி ராஜேந்திரன் ஆகியோர் சந்தித்து முக்கிய ஆலோசனை செய்து வருவதாக தகவல் வந்துள்ளது...

யார் அடுத்த தமிழக முதலமைச்சர்? அரவிந்தசாமி கூறிய ஆலோசனை

சென்னை மெரீனாவில் தமிழக முதல்வர் ஓபிஎஸ் கிளப்பிய அரசியல் புயல் இன்னும் சுழன்றடித்து வருகிறது. ஓபிஎஸ் மற்றும் சசிகலா இருவரில் யார் அடுத்த முதல்வர் என்பதை அறிய தமிழகம் மட்டுமின்றி இந்தியாவே ஆவலுடன் காத்திருக்கின்றது...