ஒரு நொடியில நாம் எடுக்குற முடிவு தான் நாம மனுஷனா, மனித மிருகமான்னு தெரியும்: 'ஒரு நொடி' டீசர்..

  • IndiaGlitz, [Thursday,April 11 2024]

'ஒரு நொடி’ என்ற திரைப்படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ’ஆகி வரும் நிலையில் இந்த டீசரில் உள்ள காட்சிகள் படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டி இருப்பதாக தெரிகிறது.

இந்த டீசரில் ஒரு பெண் காவல் நிலையத்தில் 'என் புருஷனை காணும்’ என்று புகார் கொடுக்கும் நிலையில் டீசரின் பின்னணியில் உள்ள வசனத்தில் ’ஒரு நேர்மையான போலீஸ்காரனுக்கு எப்பவாவது ஒரு சவாலான கேஸ் வரும், எல்லா மனிதர்களுக்குள்ளேயும் ஒரு மிருகம் இருக்கும், சில சமயம் ஒரு நொடியில் நாம் எடுக்கிற முடிவு தான், நாம் மனுஷனா இல்ல மனித மிருகமான்னு காட்டிக் கொடுக்கும். அந்த ஒரு நொடி நம்ம வாழ்க்கையே புரட்டி போட்டு விடும், அப்படித்தான் இந்த கேசும்’ என்ற பின்னணியில் இருக்கும் காட்சிகள் உண்மையாகவே படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டி உள்ளது.

இந்த படத்தில் தமன் குமார், எம் எஸ் பாஸ்கர், வேல ராமமூர்த்தி, பழ கருப்பையா, ஸ்ரீரஞ்சனி உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். மணிவர்மன் என்பவர் இயக்கி உள்ள இந்த படத்திற்கு சஞ்சய் மாணிக்கம் இசையமைத்துள்ளார்.

ரதிஷ் ஒளிப்பதிவில் குரு சூர்யா படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

ரம்ஜான் ஸ்பெஷல்: வெற்றியின் 9 ரகசியங்களை உடைக்கிறார் Arabian Garden உரிமையாளர் அப்துல் நபீல்!

ரம்ஜான் ஸ்பெஷல்: வெற்றியின் 9 ரகசியங்களை உடைக்கிறார் Arabian Garden உரிமையாளர் அப்துல் நபீல்! புனிதமான ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு, பிரபல உணவகமான Arabian Garden-ன் உரிமையாளர் அப்துல் நபீல்,

சிவகார்த்திகேயனின் புதிய படம்.. இயக்குனர் இசையமைப்பாளர் குறித்த அறிவிப்பு..!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் தற்போது ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் 'எஸ்கே23' என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும்

அரசியல் கட்சி ஆரம்பித்திருக்கும் விஜய்க்கு என அட்வைஸ் இதுதான்: நடிகர் கார்த்திக்

நடிகர் கார்த்திக் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது அரசியல் கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் விஜய்க்கு எனது அட்வைஸ் இது தான் என்று கூறியுள்ளார்.

வியக்க வைக்கும் கண்டுபிடிப்புகள்,ப்ளூடூத் மூலமாக கட்டுப்படுத்தப்படும் செயற்கை நுண்ணறிவு ஆசிரியை.

ஒரு மனிதனின் அறிவு திறனை அப்படியே ஒரு கணினிக்கு கொடுத்தால் என்ன ஆகும் ?அதன் வெளிப்பாடுகள் என்னவாக இருக்கும் என்பதன் தேடலே இந்த செயற்கை நுண்ணறிவு...

போடுறா வெடிய... 'கோட்' ரிலீஸ் தேதியை அறிவித்த வெங்கட்பிரபு.. சரியான பண்டிகை நாள் தான்..!

தளபதி விஜய் நடித்து வரும் 'கோட்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தற்போது ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது.