close
Choose your channels

ஆஸ்கர் சிறந்த படம் விருதில் திடீர் சொதப்பல். ஏமாற்றம் அடைந்த 'லா லா லேண்ட்' படக்குழு

Monday, February 27, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த சில மணி நேரமாக ஆஸ்கர் விருது வென்ற கலைஞர்கள், திரைப்படங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிறந்த பட விருது அறிவிக்கப்பட்டதில் ஏற்பட்ட சொதப்பலால் பெரும் குழப்ப நிலை ஏற்பட்டது.

முதலில் சிறந்த படத்திற்கான ஆஸ்கர் விருது 'லா லா லேண்ட்' படத்திற்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், உடனடியாக 'லா லா லேண்ட்' தவறாக அறிவிக்கப்பட்டதாகவும், உண்மையில் இந்த விருதை பெற்ற படம் 'மூன்லைட்' என்றும் மாற்றி அறிவிக்கப்பட்டது. விருதை அறிவிக்கும் போது தவறுதலாக படத்தின் பெயரை மாற்றி வாசித்துவிட்டதால் இந்த குளறுபடி ஏற்பட்டுள்ளதாக அறிவிப்பாளர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

இதனால் லா லா லேண்ட் படக்குழுவினர் தங்கள் படத்திற்கு விருது கிடைத்த மகிழ்ச்சியால் துள்ளி குதித்த நிலையில் சற்று நேரத்தில் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியை பார்த்து வரும் ரசிகர்கள் ஆஸ்கார் மேடையில் நடந்த சொதப்பலைக் கண்டித்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.