close
Choose your channels

விஜய்யின் 67 படங்களில் 'லியோ' டைட்டிலுக்கு மட்டும் தான் இந்த சிறப்பு..!

Friday, February 3, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் 67 வது திரைப்படத்திற்கு ‘லியோ’ என்ற டைட்டில் வைக்கப்பட்டதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த டைட்டில் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது

மேலும் படக்குழுவினர் வெளியிட்ட இரண்டு நிமிடங்களுக்கும் மேலான வீடியோ இணையதளங்களை ஸ்தம்பிக்க வைத்து வருகிறது என்பதும் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணையும் அதிரடி ஆக்சன் படத்தை பார்க்க விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் காத்திருக்கின்றனர்

இந்த நிலையில் விஜய்யின் 67வது படத்திற்கு பல்வேறு டைட்டில்களை யூகமாக ரசிகர்கள் தெரிவித்து வந்த நிலையில் யாருமே ‘லியோ’ டைட்டிலை யூகிக்கவில்லை என்பது கூடுதல் சிறப்பாகும். அதுமட்டுமின்றி படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவிப்பதற்கு முன்னதாக இந்த டைட்டில் கசியவில்லை என்பதும் பட குழுவினர் எந்த அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர் என்பது தெரிய வருகிறது

இந்த நிலையில் தளபதி விஜய் நடித்துள்ள 67 படங்களில் ‘லியோ’ டைட்டில் மட்டும்தான் ஆங்கிலத்தில் மூன்றெழுத்து டைட்டில் என்பது கூடுதல் சிறப்பாகும். தமிழில் ஏற்கனவே இரண்டு எழுத்து டைட்டில்களான தெறி, புலி, சுறா,ஆதி, யூத், குஷி, தேவா ஆகிய படங்களுக்கு பின் மீண்டும் ஒரு இரண்டு டைட்டில் இந்த ‘லியோ’ என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.