close
Choose your channels

இணையத்தில் வைரலாகும் ஓவியா-ஆரவ் பீச் செல்பி

Monday, November 19, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களான ஆரவ் மற்றும் ஓவியா காதலிப்பதாக ஒருபக்கம் வதந்தி பல மாதங்களாக இருந்து வரும் நிலையில் இருவரும் இதனை மறுத்து தாங்கள் நண்பர்களாகவே பழகி வருவதாக கூறி வருகின்றனர். இருப்பினும் இருவரின் நெருக்கமான புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வதந்தியை உறுதி செய்து வருகின்றது.

அந்த வகையில் சற்றுமுன் ஓவியாவுடன் ஆரவ் பீச் ஒன்றில் எடுத்த செல்பி புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. ஆரவ்வின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகியுள்ள இந்த பீச் புகைப்படம் வைரலாகியுள்ளது.

இந்த நிலையில் ஓவியா தற்போது ராகவா லாரன்சுடன் 'காஞ்சனா 3' மற்றும் சிலுக்குவார்ப்பட்டி சிங்கம், களவாணி 2', மற்றும் 90 எம்.எல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதேபோல் ஆரவ் தற்போது 'ராஜபீமா' என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.