புதிய திரைப்படத்தில் யோகிபாபுவுடன் இணையும் ஓவியா!

  • IndiaGlitz, [Wednesday,September 22 2021]

தமிழ் திரையுலகின் நடிகைகளில் ஒருவரான ஓவியா முதன்முதலாக யோகிபாபு உடன் இணைந்து முக்கிய வேடத்தில் நடிக்க உள்ள திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது

’களவாணி’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான ஓவியா அதன் பின் முத்துக்கு முத்தாக, மூடர் கூடம், மதயானை கூட்டம், காஞ்சனா 3 உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். தற்போது அவர் ’ராஜபீமா’ மற்றும் ’சம்பவம்’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் பிக் பாஸ் முதல் சீசனில் நடிகை ஓவியா கலந்து கொண்டார் என்பதும் அவருக்கு சமூக வலைதளங்களில் மிக பெரிய ஆதரவு கிடைத்ததோடு, முதன்முதலாக ஓவியாவுக்காக டுவிட்டரில் ஆர்மி தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நடிகை ஓவியா தற்போது யோகி பாபு உடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. செப்டம்பர் 24-ஆம் தேதி இந்த படத்தின் பூஜை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அன்றே படப்பிடிப்பும் தொடங்கும் என்று கூறப்படுகிறது

More News

அட்லி-ப்ரியா தம்பதியை சந்தித்த ஆர்யா-சாயிஷா: வைரல் புகைப்படம்!

பிரபல இயக்குனர் அட்லி தற்போது ஷாருக்கான் நடித்து வரும் 'லயன்' என்ற திரைப்படத்தை இயக்கி வரும் நிலையில் நேற்று தனது பிறந்தநாளை அவர் மும்பையில் கொண்டாடினார். இந்த கொண்டாட்டத்தில்

நடராஜனுக்கு கொரோனா: தனிமைப்படுத்தப்பட்ட 6 ஐதராபாத் வீரர்கள்!

ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டம் இன்று டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கும் நிலையில் ஹைதராபாத் அணியின் முக்கிய பந்து வீச்சாளர்களில் ஒருவரான

ஐபிஎல்- தமிழக வீரர் நடராஜனுக்கு கொரோனா பாதிப்பு!

ஐபிஎல் போட்டியில் ஐத்ராபாத் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடிவரும் தமிழக வீரர் நடராஜனுக்கு கொரோனா

'பீஸ்ட்' vs 'வலிமை' :7 ஆண்டுகளுக்கு பின் மோதும் விஜய்-அஜித் படங்கள்!

7 ஆண்டுகளுக்குப் பின்னர் அஜித் மற்றும் விஜய் திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கையில் சரக்கு பாட்டிலுடன் பார்ட்டி பண்ணிய தமிழ் நடிகை… வைரலாகும் வீடியோ!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் நடிகை அமலாபால். இவர் “மைனா“