close
Choose your channels

பிக்பாஸ் ஓவியாவின் வெப்தொடர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Thursday, June 3, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியை சொன்னாலே உடனே பலருக்கு ஞாபகம் வருவது ஓவியாதான். பிக்பாஸ் தமிழ் முதல் சீசனில் அந்த அளவுக்கு அவர் ரசிகர்களை கவர்ந்தார் என்பதும் அவருக்குத் தான் முதன்முதலில் ஆர்மி அமைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. பிக்பாஸ் இன்னும் எத்தனை சீசன் வந்தாலும் ஓவியா போன்ற ஒரு போட்டியாளரை பார்க்க முடியாது என்பதே பலரது கருத்தாக உள்ளது

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிகப் பெரிய புகழை பெற்றாலும் அவருக்கு திரையுலகில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவர் நடித்த ’90ml’ ’காஞ்சனா 4’ உள்ளிட்ட ஒருசில படங்கள் மட்டும் சுமாராக ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஓவியா நடித்துள்ள வெப்சீரிஸ் ஒன்றின் ரிலீஸ் தேதியை தனது டுவிட்டர் பக்கத்தில் ஓவியா அறிவித்துள்ளார். ஓவியா நடித்த ’மெர்லின்’ என்ற வெப்தொடர் ஜூன் 5ஆம் தேதி யூடியூப் சேனல் ஒன்றில் ரிலீஸாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஓவியாவின் ஆர்மியினர் இந்த தொடரை மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.