சரவணா ஸ்டோர் விளம்பரப் படத்தில் ஓவியா?

  • IndiaGlitz, [Friday,September 15 2017]

பிக்பாஸ் புகழ் ஓவியாவின் அடுத்த படம் எது என்பது குறித்த அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளிவரவில்லை. ஆயினும் ஓவியா ஆர்மியினர் இந்த அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது உண்மை.

இந்த நிலையில் 'சரவணா ஸ்டோர் விளம்பரத்தில் நடிக்க ஓவியா ஒப்பந்தமாகியுள்ளதாகவும், அவருடன் சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் ஆடிப்பாடி நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. 

ஏற்கனவே ஹன்சிகா, தமன்னாவுடன் விளம்பரப்படங்களில் நடித்த சரவணன், தற்போது தீபாவளிக்காக தயாரிக்கப்படும் புதிய விளம்பர படத்தில் ஓவியாவுடன் நடிக்கவுள்ளதாகவும், இதற்காக ஓவியாவுக்கு ஒரு பெரிய தொகை சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஓவியாவை திரையில் பார்த்தால் போதும், அது திரைப்படமாக இருந்தாலும் சரி, விளம்பர படமாக இருந்தாலும் சரி என்று காத்திருக்கும் ஓவியா ஆர்மியினர்களுக்கு நிச்சயம் இது இனிக்கும் செய்தியாகத்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

இந்திய மணமகன் - ஆப்கன் மணமகள்: 11 ரூபாயில் நடந்த எளிமையான திருமணம்

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்றும் கூறப்படுவதையும் திருமணத்திற்காக கோடிக்கணக்கில் ஆடம்பரமாக செலவு செய்யப்படுவதையும் நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம்.

சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' படம் குறித்த முக்கிய தகவல்

சூர்யா, கீர்த்திசுரேஷ் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடந்திருந்தால் இந்நேரம் முடிந்திருக்கும்.

விஜய்க்காக 'ஸ்கெட்சை' மாற்றிய விக்ரம்

கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்னர் தீபாவளி, பொங்கல் போன்ற திருவிழா நாட்களில் முன்னணி நடிகர்களின் படங்கள் மொத்தமாக ரிலீஸ் ஆகும்.

'விவேகம்' இடத்தை பிடித்த மகேஷ்பாபுவின் 'ஸ்பைடர்'

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு, ராகுல் ப்ரித்திசிங் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'ஸ்பைடர்' திரைப்படம் வரும் 27ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

அரியலூர் மாணவி ரங்கீலா கல்விக்கட்டணம். விஜய் ரசிகர்களின் அதிரடி முடிவு

அரியலூர் மாணவி ரங்கீலாவுக்கு ஆயுர்வேத படிப்பு படிக்க நிதியுதவி செய்வதாக கூறி பின்னர் ஏமாற்றிவிட்டதாக விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்ட செய்தி அனைவரும் அறிந்ததே