close
Choose your channels

அடுத்தடுத்த நாட்களில் ஓவியாவின் இரண்டு பட டிரைலர்கள்!

Wednesday, March 27, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒவியா நடிப்பில் சமீபத்தில் வெளியான '90ml' திரைப்படம் சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்யப்பட்டாலும் வசூல் அளவில் திருப்தியான ஒரு படமாக படக்குழுவினர்களுக்கு அமைந்தது. இந்த நிலையில் ஓவியா நடித்து வரும் இரண்டு படங்களின் டிரைலர்கள் மார்ச் 27, மார்ச் 28 என அடுத்தடுத்த நாட்களில் வெளிவரவுள்ளது.

ஓவியா முக்கிய வேடத்தில் நடித்த 'கணேஷா மீண்டும் சந்திப்போம்' படத்தின் டிரைலர் மார்ச் 27ஆம் தேதியான இன்றும், நாளை அதாவது மார்ச் 28ஆம் தேதி ராகவா லாரன்ஸ் உடன் ஓவியா நடித்த 'காஞ்சனா 3' திரைப்படத்தின் டிரைலரும் ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 'கணேஷா மீண்டும் சந்திப்போம்' படத்தின் பாடல்களும் இன்று வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரித்விராஜன், ஓவியா முக்கிய வேடத்தில் நடித்த ''கணேஷா மீண்டும் சந்திப்போம்'' படத்தை ரத்தீஷ் எரேட் என்பவர் இயக்கியுள்ளார். சிபி இசையில், விபிந்த் ராஜ் ஒளிப்பதிவில் சாய் சுரேஷ் படத்தொகுப்பில் உருவான இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது. அதேபோல் ஓவியாவின் 'காஞ்சனா 3' திரைப்படம் தமிழ்ப்புத்தாண்டு விருந்தாக வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.