சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஸ்பெஷல் மரியாதை செலுத்தும் நடிகை ஓவியா: பரபரப்பு தகவல் 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரையுலகில் அறிமுகமாகி 45 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இது குறித்த காமன் டிபி போஸ்டரை சமீபத்தில் பல திரையுலக பிரமுகர்கள் வெளியிட்டனர் என்பதும், அந்த போஸ்டர்கள் சமூகவலைதளத்தில் வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் 45 ஆண்டுகள் திரையுலகில் சாதனை செய்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் ஸ்பெஷல் போஸ்டர் ஒன்று வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு வெளியாக உள்ளது. இந்த போஸ்டரை நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான ஓவியா வெளியிட உள்ளார்.

ஓவியா தனது சமூக வலைத்தளத்தில் இது குறித்த தகவலை பதிவு செய்து இதற்கான விளம்பர போஸ்டர் ஒன்றையும் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஓவியா வெளியிடும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஸ்பெஷல் போஸ்டர் எப்படி உள்ளது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.