close
Choose your channels

ஒரே புகைப்படத்தில் 168 படங்களின் டைட்டில்கள், 45 கெட்டப்புகள்: ஓவியா வெளியிட்ட புகைப்படங்கள்

Saturday, August 15, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை ஓவியா சற்றுமுன் வெளியிட்ட இரண்டு புகைப்படங்களில் ஒன்றில் ரஜினியின் 45 கெட்டப்புகளும், மற்றொன்றில் அவர் நடித்த 168 படங்களின் டைட்டில்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த 1975ஆம் ஆண்டு கே பாலச்சந்தர் இயக்கிய ’அபூர்வ ராகங்கள்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதன் பின்னர் அவர் ஒரு சில திரைப் படங்களில் வில்லனாகவும் அதன் பின்னர் ஹீரோவாகவும் சூப்பர் ஸ்டார் ஆகவும் நடித்து வருகிறார் என்பதும், தற்போது வரை தமிழ் சினிமாவில் அவர் தான் நம்பர் 1 என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ரஜினியின் 45 வருட திரையுலக பயணம் குறித்த கொண்டாட்டத்தை அவரது ரசிகர்களும் திரையுலகினரும் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு நடிகை ஓவியா ரஜினியின் 45 வருட திரையுலக பயணம் குறித்த புதிய ஸ்டில்களை வெளியிட உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது

அதன்படி சற்று முன்னர் நடிகை ஓவியா தனது சமூக வலைத்தளத்தில் இரண்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு புகைப்படத்தில் 45 விதமான ரஜினியின் கெட்டப்புகள் உள்ளன. இன்னொரு புகைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்த ’அபூர்வ ராகங்கள்’ முதல் ’அண்ணாத்த’ வரையிலான 168 திரைப்படங்களின் டைட்டில்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஓவியா வெளியிட்ட இந்த இரண்டு புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.