close
Choose your channels

இன்றிரவு 7 மணிக்கு ஓவியாவுக்காக சிம்பு தரும் இசை விருந்து

Thursday, January 17, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஓவியா நடித்து வரும் படங்களில் ஒன்று '90ml'. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் கடந்த சில நாட்களாக இந்த படத்தின் பாடல்களை கம்போஸ் செய்யும் பணியில் இந்த படத்தின் இசையமைப்பாளர் சிம்பு ஈடுபட்டிருந்தார்.

இந்த நிலையில் இந்த படத்தின் பாடல்கள் ஒலிப்பதிவு பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் இன்று இரவு ஏழு மணிக்கு இந்த படத்தின் பாடல்களில் ஒன்றாகிய 'ஃபிரெண்டிடா' என்ற பாடலை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். ஓவியாவின் படத்திற்காக சிம்பு கம்போஸ் செய்துள்ள இந்த இசை விருந்தை ஓவியா தனது நண்பரக்ளுக்கு இன்றிரவு 7 மணிக்கு அர்ப்பணிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓவியா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தை அனித் உதூப் இயக்கி வருகிறார். அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவில் அந்தோணி படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை நிவிஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.