இன்று ஒவ்வொருவரும் பெருமைப்படும் நாள்: ஓவியா

நடிகை ஓவியா சற்றுமுன் தனது சமூக வலைத்தளத்தில் 'இன்று ஒவ்வொரு இந்தியனும் பெருமிப்பட வேண்டிய நாள்' என்று ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். இந்த டுவீட்டை முழுமையாக படிக்காத ஒருசிலர் இன்று ஓவியாவின் ''90ml' திரைப்படம் ரிலீசைத்தான் அவர் பெருமையாக கூறுவதாக அவசரப்பட்டு கமெண்ட்டுக்களை பதிவு செய்து வருகின்ற்னர்.

ஆனால் ஓவியா தனது டுவிட்டில் கூறியது இதுதான்: 'இன்று ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டிய நாள். விங் கமாண்டர் அபிநந்தன் வர்தாமான் இந்தியா திரும்பும் நாள். அவர் விடுதலையான இந்த நாளை பொதுமக்கள் திருவிழா போல் கொண்டாடி வருவதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. அபிநந்தனின் வீரத்திற்கு ஒரு சல்யூட். அவருக்கும் அவருடைய குடும்பத்தினர்களுக்கும் கடவுளின் ஆசி எப்போதும் இருக்கும். ஜெய்ஹிந்த்! என்று பதிவு செய்துள்ளார்.

ஓவியாவின் இந்த டுவீட்டை பெரும்பாலானோர் பாராட்டி வருகின்றனர். இருப்பினும் ஒருசிலர் அவர் ''90ml' போன்ற படத்தில் நடித்தது குறித்து தங்களது அதிருப்தியையும் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் ஓவியாவின் தேசப்பற்றை வெளிப்படுத்தும் விதமாக அவர் பதிவு செய்துள்ள முதல் டுவீட் இதுதான் என்பதையும் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.,

More News

இணையத்தில் டிரெண்ட் ஆகும் 'கோபேக் மோடி', 'வெல்கம் அபிநந்தன்'

பிரதமர் மோடி எப்போது தமிழகம் வந்தாலும் கருப்புக்கொடி காட்டுவதை வழக்கமாக கொண்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்றும் பிரதமர் மோடி கன்னீயாகுமரிக்கு வந்ததற்கு

கமல் கட்சியுடன் பாமக கூட்டணி வைத்திருக்கலாம்: பிரபல நடிகர் கிண்டல்

வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி என்பது கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்பே எதிர்பார்த்தது தான். ஆனால் இந்த கூட்டணியில் பாமக இணைந்தது பலருக்கு பெரும் அதிர்ச்சி.

கடவுள் தான் இந்த நாட்டை காப்பாற்ற வேண்டும்: விஷ்ணு விஷால்

புல்வாமா தாக்குதல், இந்தியாவின் பதிலடி, பாகிஸ்தான் ராணுவத்தினர்களால் அபிநந்தன் கைது, இந்தியாவின் ராஜதந்திரத்தால் இன்று அபிநந்தன் விடுதலை என கடந்த சில நாட்களாக இந்தியா

மார்வெல் ஸ்டுடியோ படங்களில் அஜித், விஜய், சூர்யா கேரக்டர்கள்: காஜல் அகர்வால்

மார்வெல் ஸ்டுடியோவின் திரைப்படங்கள் உலக அளவில் சூப்பர் ஹிட் என்பது அனைவரும் அறிந்ததே.

வாகா வந்தடைந்தார் அபிநந்தன்: உற்சாகமான வரவேற்பு

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பாகிஸ்தானில் சிக்கிய தமிழகத்தை சேர்ந்த இந்திய ராணுவ வீரர் அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது.