கல்லுக்கு கூட சாரி சொல்லும் குழந்தை மனசு ஓவியா! நெட்டிசன்கள் நெகிழ்ச்சி

  • IndiaGlitz, [Tuesday,July 25 2017]

பொதுவாக நாம் நடந்து போகும்போது கல் இடித்துவிட்டால் நாம் தான் கல்லை இடித்தோம் என்பதை மறந்து கல்லை திட்டுவோம். ஆனால் கல்லின்மீது இடித்து கல்லுக்கு சாரி சொன்ன ஓவியாவின் காட்சி ஒன்று நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒளிபரப்பானது.

காலையில் தூங்கி எழும்போது ஒரு பாடல் ஒலிப்பது வழக்கமாக நடைபெறுவதுதான். நேற்றும் காலை எட்டு மணிக்கு பிக்பாஸ் வீட்டில் பாடல் ஒலித்தது. இந்த பாடலுக்கு வழக்கம்போல் எழுந்தவுடன் டான்ஸ் ஆடிய ஓவியா, பின்னர் படுக்கை அறையில் இருந்து வெளியே வந்தும் டான்ஸ் ஆடினார்.

அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த கல் ஒன்றில் அவரது கால் இடித்துவிட்டது. உடனே அந்த கல்லிடம் அவர் சாரி கேட்டார். இந்த ஒரே ஒரு காட்சியை வைத்து ஒரு பக்கத்துக்கும் மேலாக சமூக வலைத்தளங்களில் கமெண்ட்டுக்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அவற்றில் சிலவற்றை தற்போது பார்ப்போமா!

சிமிண்ட்டு கல்லுல இடிச்சதுக்கு அதுகிட்ட போய் சாரி கேக்குற ஓவியா எங்க? பொய்யின்னு தெரிஞ்சும் ஓவியாட்ட சாரி கேக்காத ஜூலி நீ எங்க?

கால தட்டிவிட்ட கல்லுக்கு கூட சாரி சொல்லுது ஓவியா.. சொக்க தங்கம் டா #Oviya

கல்லு மேல இடிச்சுட்டு கல்லுக்கு சாரி சொல்ற மனசு இருக்கே அதான் சார் ஓவியா #ஓவியா_ஆர்மிஸ்.

ஒரு கல்லுல ஓவியா கால இடிச்சிக்கிட்டா அந்த கல்லுக்கும் சாரி சொல்லுது ஓவியா குட்டி.

பாவம்யா ஓவியா செங்களுக்கும் சாரி சொல்லுது ...!!!

அங்க இருக்க கல்லு மேல இடிச்சுட்டன்னு, கல்லுக்கெல்லாம் சாரி சொல்லுதுயா எங்க ஓவியா செல்லம்... இதெல்லாம் நடிப்பு இல்ல இயல்பான குணம்தான்.

கல்லுக்குகூட சாரி சொல்லுது ஓவியா புள்ள. ஐயோ எப்படி வளத்துருக்காய்ங்க..

கால தட்டிவிட்ட கல்லுக்கு கூட சாரி சொல்லுது ஓவியா.. இதெல்லாம் தெய்வ லெவல்.

More News

பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் காலமானார்.

ராமராஜன் நடித்த 'என்னப் பெத்த ராசா, என் ராஜாங்கம், ஊரெல்லாம் உன் பாட்டு போன்ற திரைப்படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் சிராஜ் நேற்றிரவு சென்னையில் காலமானார். அவருக்கு வயது 65....

கன்பஃக்ஷன் அறையில் கண்ணீர் விட்ட ஓவியா

பிக்பாஸ் வீட்டில் தற்போது ஒன்பது மட்டுமே இருந்தாலும் ஓவியா தனிமைப்படுத்தப்பட்டதாகவே தெரிகிறது. ஓவியாவை தவிர அனைவரும் ஒரு குரூப்பாகவும், ஓவியா தனியாகவும் இருந்தாலும், ஓவியாவின் மனவலிமை அவரை அந்த வீட்டில் தொடர்ந்து இருக்க வைத்து வருகிறது...

சினேகனுக்கு ரைசா எச்சரிக்கை: அடுத்த கார்னர் தயாரா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா கிட்டத்தட்ட வெற்றி பெற்றுவிடுவார் என்று அனைவருக்குமே தெரிந்துவிட்டது...

லைகாவுடன் மீண்டும் இணைந்த ஏ.ஆர்.முருகதாஸ்: அதிகாரபூர்வ அறிவிப்பு

பிரபல தயாரிப்பு நிறுவனம் லைகா புரடொக்ஷன்ஸ் தயாரித்த முதல் படமான 'கத்தி' திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் தான் இயக்கினார் என்பது தெரிந்ததே...

ஜெ.இருந்தபோது கமல் மட்டும்தான் வாயை மூடிக்கொண்டிருந்தாரா?- விஜயகாந்த் விளாசல்

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாக கூறி வரும் அரசியல் குறித்த கருத்துக்கள் தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.