ரஜினி, அஜித்துடன் ஓப்பிடப்படும் ஓவியா! நெட்டிசன்களின் கலக்கல்

  • IndiaGlitz, [Saturday,July 22 2017]

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒரே ஹீரோ ஓவியா தான் என்று நேயர்களால் பார்க்கப்பட, அவருக்கு குவிந்து வரும் அமோக ஆதரவால் நிச்சயம் அவர் இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக மாறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக நெட்டிசன்களால் கலாய்க்கப்படாத ஒரே நபராகவும், ரஜினி, அஜித்துடன் ஒப்பிடப்பட்டு மிமி கிரியேட் செய்யப்படும் அளவிற்கு ஓவியா வலம் வந்து கொண்டிருக்கின்றார்.

நேற்றைய நிகழ்ச்சியில் சக்தியிடம் 'எங்கே அறைங்க பார்க்கலாம்' என்று கெத்தாக ஓவியா கூறிய அந்த வசனம், 'தளபதி' படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், போலீஸ் அதிகாரி கிட்டியிடம் 'எங்கே தொட்றா பார்க்கலாம்' என்ற வசனத்திற்கு இணையானது என்று நெட்டிசன்கள் மிமி கிரியேட் செய்துள்ளனர்.

அதேபோல் காயத்ரியிடம் கோபித்து கொண்டு ஓவியா நடந்து சென்ற காட்சி, 'கபாலி' படத்தில் ரஜினி 'நெருப்புடா' பாடலுக்கு ஆக்ரோஷமாக நடந்து சென்ற காட்சிக்கு இணையானது என்று இன்னொரு நெட்டிசன் பதிவு செய்துள்ளார். மேலும் இதே காட்சியை 'பில்லா 2' படத்தில் அஜித் நடந்து வரும் காட்சிக்கு இணையாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

More News

லைகாவின் அடுத்த படத்தில் நயன்தாரா: முழுவிபரம் இதோ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள '2.0' என்ற படத்தை சுமார் ரூ.450 கோடி பட்ஜெட்டில் தயாரித்து வரும் நிறுவனம் லைகா புரடொக்ஷன்ஸ். இதே நிறுவனம் கமல்ஹாசனின் 'மருதநாயகம்' படத்தையும் தயாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...

ஓவியாவின் பொறுமையை சோதித்த ஜூலி: முதன்முதலாக ஆத்திரப்பட்ட ஓவியா

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமான முதல் நாளில் இருந்து புன்சிரிப்புடன் கள்ளங்கபடம் இல்லாமல் இருக்கும் ஒரே பங்கேற்பாளர் ஓவியா தான் என்பது அனைவரின் கருத்தாக உள்ளது...

தளபதியின் 'மெர்சல்' இசை வெளியீட்டு தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் 'மெர்சல்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் இன்றைய ஆடிவெள்ளி விசேஷமாக இந்த படம் குறித்து ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் அறிவித்திருந்ததை காலைய&#

கமல்ஹாசனை அடுத்து ஊழலை வெளிப்படுத்திய துணிச்சலான இயக்குனர்

உலகநாயகன் கமல்ஹாசன், தமிழகத்தின் அனைத்து துறைகளிலும் ஊழல் நடக்கின்றது என்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஆணித்தரமாக கூறினார்..

விஜய் ஆண்டனி-கிருத்திகா படத்தின் நாயகி இவர்தான்!

கோலிவுட் திரையுலகில் பிரபல இசையமைப்பாளராக அறிமுகமாகி அதன்பின்னர் ஹீரோவாக தொடர் வெற்றி படங்களை கொடுத்தவர் விஜய் ஆண்டனி. தற்போது முழுநேர ஹீரோவாக மாறிவிட்ட விஜய் ஆண்டனி, 'முப்பரிமாணம்', 'அண்ணாத்துரை', 'காளி' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.