close
Choose your channels

ஓவியா உள்பட 4 பிக்பாஸ் பங்கேற்பாளர்கள் நடித்த படம்

Saturday, August 26, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஓவியா ஒரு சாதாரண நடிகை. ஆனால் இன்று அவர் இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் கனவுக்கன்னி. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் உலகப்புகழ் பெற்ற ஓவியாவை தங்கள் படத்தில் நடிக்க வைக்க முன்னணி நடிகர்களே முயற்சிப்பதாக கேள்வி.

இந்த நிலையில் ஓவியா நடித்து இன்னும் வெளிவராமல் உள்ள ஒரு படம் தற்போது திடீரென முக்கியத்துவம் பெற்றுள்ளது. சில மாதங்களுக்கு முன் இந்த படத்தின் குழுவினர்களே தயாரிப்பாளரிடம் சம்பள பாக்கி இருப்பதாக கூறி டார்ச்சர் செய்த நிலையில் நொந்து நூலான தயாரிப்பாளருக்கு சமீபத்தில் ஓவியா போன் செய்து ஆறுதல் வார்த்தைகள் கூறினாராம்.

இந்த படம் வெற்றியடைய வேண்டும், நீங்கள் ஜெயிக்க வேண்டும். நான் இருக்கின்றேன் கவலைப்படாதீர்கள். படத்தின் புரமோஷன் எப்போது என்று கூறுங்கள், நான் வருகிறேன் என்று ஓவியா கூறினாராம். இதனால் தயாரிப்பாளர் ஆனந்தக்கண்ணீர் வடித்ததாக கூறப்படுகிறது.

இதனால் வேறு பெயரில் தயாராகி வந்த இந்த படத்திற்கு ஓவியாவை பெருமைப்படுத்த வேண்டும் என்ற காரணத்தினால் 'ஓவியாவை விட்டா யாரு' என்று படத்தின் டைட்டிலையே மாற்றிவிட்டாராம் இந்த படத்தின் தயாரிப்பாளர் மதுரை செல்வம்.

ஓவியா, சஞ்சீவி, செந்தில், பவர்ஸ்டார் சீனுவாசன், சின்னிஜெயந்த், வையாபுரி, கஞ்சாகருப்பு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ராஜதுரை என்பவர் இயக்கியுள்ளார். சினேகன், விவேகன் பாடல்கள் எழுதிய இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் ஓவியா, சினேகன், வையாபுரி, கஞ்சாகருப்பு ஆகிய நான்கு பிக்பாஸ் பங்கேற்பாளர்கள் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.