ஆர்யாவின் அடுத்த படத்தை இயக்கும் ரஜினி பட இயக்குனர்!

  • IndiaGlitz, [Monday,September 09 2019]

ஆர்யா நடித்த 'மகாமுனி' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து ஊடகங்களின் பாசிட்டிவ் விமர்சனத்தை பெற்ற நிலையில் இந்த படம் வசூல் அளவில் வெற்றிப்படமா? என்பதை இனிமேல் தான் பார்க்க வேண்டும்.

இந்த நிலையில் ஆர்யாவின் அடுத்த படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' மற்றும் 'காலா' திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கவிருப்பதாகவும், இந்த படம் பாக்ஸிங் சம்பந்தப்பட்ட ஒரு திரைப்படம் என்றும் இந்த படம் வடசென்னை மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

'மகாமுனி' படத்தை அடுத்து சூர்யாவுடன் ஆர்யா நடித்த 'காப்பான்' திரைப்படம் வரும் 20ஆம் தேதி வெளியாகவுள்ளது. மேலும் அவர் தனது மனைவி சாயிஷாவுடன் 'டெடி' என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடையவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

மக்கள் தீர்ப்பு தவறு, பிக்பாஸையே எகிறிய வனிதா!

பிக்பாஸ் வீட்டில் நேற்று சேரன் வெளியேற்றப்படுவதாக கமல்ஹாசன் அறிவித்தவுடன் போட்டியாளர்களில் அதிக அதிர்ச்சி அடைந்தவர் வனிதா தான். இது ரொம்ப தவறாக இருப்பதாகவும், மக்கள் தீர்ப்பு தவறு

என்னால முடியல, நான் விட்டுக்கொடுத்துடறேன்: வனிதா

பிக்பாஸ் என்பது ஒரு கேம், இதில் விட்டுக்கொடுப்பதற்கோ, செண்டிமெண்டுக்கோ இடமில்லை என்று கூறிய வனிதா இன்றைய நிகழ்ச்சியின் டாஸ்க் ஒன்றில் விட்டுக்கொடுத்தது முரண்பாடாக உள்ளது

மாயமான விக்ரம் லேண்டர் கண்டிபிடிக்கப்பட்டது: இஸ்ரோ சிவன் பரபரப்பு தகவல்

சந்திராயன் 2 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் சந்திரனில் தரையிறங்கவிருந்த ஒருசில நிமிடங்களுக்கு முன் திடீரென தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

'விஸ்வாசம்' சாதனையை யாராலும் மறைத்துவிட முடியாது: பிரபல தயாரிப்பாளர்

தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனை செய்தது. இந்த படம் செய்த வசூல் சாதனையை

சோகத்தில் மூழ்கிய நடிகை தேவயானி குடும்பம்

அஜித், விஜய் உள்பட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த நடிகை தேவயானி தற்போது ஒருசில படங்களில் மட்டும் நடித்து வருகிறார். இவருடைய சகோதரர் தான் நடிகர் நகுல் என்பது குறிப்பிடத்தக்கது