பா ரஞ்சித்தின் 'சார்பாட்டா பரம்பரை' ரிலீஸ் குறித்த தகவல்: ரசிகர்கள் அதிருப்தி!

  • IndiaGlitz, [Wednesday,June 30 2021]

ஆர்யா நடிப்பில் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சார்பாட்டா பரம்பரை’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி ஒரு சில மாதங்கள் ஆன நிலையில் விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தப் படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதற்காக படக்குழுவினர் காத்திருந்ததாகவும் ஆனால் தற்போது திரையரங்குகள் எப்போது திறக்கும் என்பது குறித்த தகவல் இல்லை என்பதால் ஓடிடியில் ரிலீஸ் செய்ய முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தன.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ‘சார்பாட்டா பரம்பரை’ திரைப்படம் அமேசான் ஓடிடியில் நேரடியாக ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

குத்து சண்டை வீரராக இந்த படத்தில் நடிக்கும் நடிகர் ஆர்யா மிகவும் ரிஸ்க் எடுத்து இந்த படத்திற்காக தனது உடலை உடற்பயிற்சி செய்து நிஜ குத்து சண்டை வீரர் போல் மாறியிருந்தார் என்பதால் இந்த படத்தை திரையரங்குகளில் காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் தற்போது நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் என்பதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்யா, துஷாரா, கலையரசன், சந்தோஷ் பிரதாப், ஜான் விஜய் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். முரளி ஒளிப்பதிவில், செல்வா படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ரோஜாக்களின் காதலன்....! ஆணழகன் அரவிந்த் சாமிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...!

90-களில் பெண்களின் கனவு நாயகன், ஆண் மக்களே பொறாமைப்படும் அளவிற்கு அழகுற இருக்கும் ஆணழகன்,

ஷங்கரின் 'இந்தியன் 2' வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் 'இந்தியன் 2' பட பிரச்சனை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம்

'மன்மதன்' நடிகையின் கணவர் மாரடப்பால் மரணம்: திரையுலகினர் இரங்கல்!

தமிழில் சிம்பு நடித்த 'மன்மதன்' படத்தில் நடித்த நடிகையின் கணவர் திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்ததை அடுத்து திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் 

நீச்சல்குளத்தில் பிகினி உடையுடன் ரகுல் ப்ரீத்திசிங்: வைரல் புகைப்படம்!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையான ரகுல் ப்ரீத்திசிங் தமிழில் அருண்விஜய் நடித்த 'தடையற தாக்க' என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பெற்றார்.

ஏ.ஆர்.ரஹ்மான் பாடலை இசைத்து, பாடி கலக்கு நிவேதா தாமஸ்: வைரல் வீடியோ!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நிவேதா தாமஸ் இசைப்புயல் ஏஆர் ரஹ்மானின் பாடலை இசைத்து பாடிய வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள நிலையில்