close
Choose your channels

இயக்குனர் பா.ரஞ்சித்தின் அடுத்த பட ஹீரோவாகும் கலையரசன்

Saturday, April 20, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' மற்றும் 'காலா' படங்களை இயக்கிய இயக்குனர் பா.ரஞ்சித் தற்போது 'பிர்சா முண்டா' என்ற இந்தி படத்தை இயக்கி வருகிறார். இந்தியாவின் முதல் பழங்குடியின தலைவர் பிர்சா முண்டாவின் வாழக்கையை மையப்படுத்தி இந்த படம் உருவாகி வருகிறது.

இந்த நிலையில் பா.ரஞ்சித் தயாரிக்கும் ஒரு புதிய படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. சுரேஷ் மாரி என்பவர் இயக்கவுள்ள இந்த படத்தின் நாயகனாக கலையரசன் நடிக்கவுள்ளார். பா.ரஞ்சித்தின் தயாரிப்பு நிறுவனமான நீலம் புரடொக்சன்ஸ் மற்றும் ஷராதா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றன.

இந்த படத்தின் நாயகி உள்பட மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.