பா.ரஞ்சித்தின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு

  • IndiaGlitz, [Sunday,March 17 2019]

'அட்டக்கத்தி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அதன்பின்னர் மெட்ராஸ், கபாலி, காலா போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் பா.ரஞ்சித் தற்போது பாலிவுட்டில் 'பிர்சா முண்டா' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் 'பரியேறும் பெருமாள்' படத்தின் வெற்றியை அடுத்து பா.ரஞ்சித் தயாரித்து வரும் திரைப்படம் 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு. பா.இரஞ்சித்தின் உதவியாளர் அதியன் ஆதிரை இயக்கும் இந்த படத்தில் தினேஷ் நாயகனாகவும், இவருக்கு ஜோடியாக கயல் ஆனந்தியும் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

தென்மா இசையமைப்பில் கிஷோர் குமார் ஒளிப்பதிவில் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது. இதனையடுத்து விரைவில் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் தொடங்கப்பட்டு விரைவில் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.