விழிப்படைவோம்! பெரியார் சிலை அவமதிப்பு குறித்து பா.ரஞ்சித்

இன்று காலை கோவை மாவட்டம் சுந்தராபுரம் என்ற பகுதியில் உள்ள பெரியார் சிலை மீது மர்ம நபர்கள் சிலர் காவிச்சாயம் ஊற்றி அவமதிப்பு செய்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றப்பட்டது குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அதிமுக அமைச்சர் ஜெயகுமார், பாஜக பிரமுகர் வானதி ஸ்ரீனிவாசன் உள்பட பலர் கண்டித்துள்ளனர்.

இந்த நிலையில் அவ்வப்போது தனது டுவிட்டரில் சமூகத்தில் நடைபெறும் அவலங்கள் குறித்து குரல் கொடுத்துவரும் இயக்குனர் பா.ரஞ்சித் இதுகுறித்து தனது கருத்தை தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:

தந்தை பெரியாருக்கும், அண்ணல் அம்பேத்கருக்கும் காவி ஊற்றி இழிவுபடுத்துவது வாடிக்கையாகி விட்டது. இந்துத்துவ பிற்போக்குத்தனத்தை எதிர்ப்போரை பொது சமூகத்திற்க்கு எதிரியாக மாற்றுதல், அழித்தொழித்தல் என தங்கள் வேலைத்திட்டத்தை மத உணர்வை தூண்டி செயல்படுத்தி கொள்கிறார்கள்! விழிப்படைவோம்.

More News

சுவர் ஏறி குதித்து புரோட்டா வாங்க சென்ற கொரோனா நோயாளி: கொரோனா வார்டில் பரபரப்பு

கொரோனா வார்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த கொரனோ நோயாளி ஒருவர் சுவர் ஏறி குதித்து புரோட்டா வாங்க சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

நிக்கி கல்ராணி மீது காதலா? முக்கிய விழாவுக்கு அழைப்பு விடுத்த தமிழ் ஹீரோ!

தந்தையின் பிறந்த நாள் விழாவுக்கு குடும்ப உறுப்பினர்களைத் தவிர நிக்கி கல்ராணிக்கு மட்டும் தமிழ் நடிகர் ஒருவர் அழைப்பு விடுப்பதால் இருவருக்கும் காதல் என்று திரையுலக வட்டாரங்களில் கூறப்படுகிறது

பணத்தை வாங்கிக்கொண்டு 6,300 பேருக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வழங்கிய இயக்குநர்!!! திடுக்கிடும் சம்பவம்!!!

வங்காளத்தேசத்தில் உலகையே உலுக்கும் ஒரு மோசடி சம்பவம் நடைபெற்று தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

உலகில் எங்கிருந்தாலும் ஆன்லைன் மூலம் தமிழ் கல்வி: மதன்கார்க்கியின் புதிய முயற்சி

எளிமையான முறையில் தமிழ் மொழியை பயிற்றுவிக்கும் இணைய வகுப்புகளுக்காக பாடலாசிரியர் மதன்கார்க்கி நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். 

என் தகப்பனார் இவருடைய பெரும் ரசிகர்: டிஐஜியின் தாத்தா குறித்து கமல்ஹாசன்

எளிமையும் நேர்மையும் ஒன்றிணைந்தவரும், தமிழக அரசியல் அடையாளங்களில் ஒருவருமான முன்னாள் அமைச்சர் கக்கன் அவர்களின் அதே எளிமையை உடைய அவருடைய பேத்தி ராஜேஸ்வரி அவர்கள் சமீபத்தில் டிஐஜி ஆக பொறுப்பேற்றார்.