பா ரஞ்சித்தின் சூப்பர்ஹிட் படம்.. 2ஆம் பாகத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Monday,March 06 2023]

பிரபல இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவான சூப்பர் ஹிட் படம் ஒன்றின் இரண்டாம் பாகம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு சற்றுமுன் வெளியாகி உள்ளது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த ’சார்பாட்டா பரம்பரை’ என்ற திரைப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு அமேசான் ஓடிடியில் நேரடியாக வெளியானது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்ததன் காரணமாக வேறு வழியின்றி இந்த படம் அமேசான் ஓடிடியில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பதும் ஊடகங்கள் அனைத்தும் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் அளித்தன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ’சார்பட்டா பரம்பரை’ படத்தின் மிகப்பெரிய வெற்றி காரணமாக இந்த படத்தின் இரண்டாம் பாக அறிவிப்பை சற்றுமுன் நடிகர் ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேட்ச் பார்க்க ரெடியா? ரோஷமான ஆங்கில குத்து சண்டை.. ரவுண்டு 2 என்று அவர் பதிவு செய்துள்ளார் மேலும் ’சார்பாட்டா 2’ விரைவில் என்றும் அவர் பதிவு செய்துள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

கமல்ஹாசன் வெளியிட்ட தங்கர் பச்சானின்  'கருமேகங்கள் கலைகின்றன' முதல் தோற்றம்! 

தமிழ் திரையுலகில் மாறுபட்ட வாழ்வியல் படைப்புகளால், மக்கள் மனங்களை வென்ற  இயக்குநர் தங்கர்பச்சான் இயக்கத்தில்,  நீண்ட இடைவேளைக்கு பிறகு மனித வாழ்வியலை சொல்லும் அழுத்தமாக

அம்மா மகளா? அக்கா தங்கையா? லைக்ஸ்களை குவிக்கும் கெளதமியின் புகைப்படங்கள்..!

 நடிகை கெளதமி தனது மகளுடன் இருக்கும் புகைப்படம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் இது அம்மா மகளா? அல்லது அக்கா தங்கையா? என ரசிகர்கள் கமெண்ட் அளித்து வருகின்றனர்.

எங்கள் குட்டி சாம்ராஜ்யத்தை உருவாக்க தொடங்குகிறோம்: மணிமேகலை அறிவிப்பு..!

 எங்கள் குட்டி சாம்ராஜத்தை உருவாக்க தொடங்குகிறோம் என குக் வித் கோமாளி மணிமேகலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். 

நீச்சல் குளத்தில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்.. காஜல் அகர்வாலின் க்யூட் வீடியோ..!

 நடிகை காஜல் அகர்வால் நீச்சல் குளத்தில் தனது செல்ல மகனுடன் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்தில் ஈடுபடும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. 

அஜித்தின் அடுத்த புரொஜக்ட்.. டைட்டிலை அறிவித்த சுரேஷ் சந்திரா..!

 அஜித் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படம் 'ஏகே 62' என்று கூறப்படும் நிலையில் இந்த படத்தை அடுத்து உலக அளவில் பைக் சுற்றுலா செல்ல இருப்பதாகவும் அதன் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும்