close
Choose your channels

மக்களவை தேர்தல்: பிரபல அரசியல் கட்சி தலைவருக்கு ஆதரவு கொடுத்த பா.ரஞ்சித்

Thursday, March 21, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கிவிட்ட நிலையில் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வதிலும் பிரச்சாரம் செய்வதிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்,. இந்த நிலையில் திமுக கூட்டணியில் சிதம்பரம், விழுப்புரம் என இரண்டு தொகுதிகளை பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி, விழுப்புரம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்திலும், சிதம்பரம் தொகுதியில் பானை சின்னத்திலும் போட்டியிடுகின்றது

விசிக தலைவர் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'கபாலி', 'காலா' படங்களை இயக்கிய இயக்குனர் பா.ரஞ்சித் இன்று திருமாவளவனை நேரில் சந்தித்து அவருக்கு ஆதரவு தெரிவித்ததுடன் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்து கொண்டார்.

ஜாதி ஒழிக்கப்பட வேண்டும் என்று தனது படங்களில் கருத்து சொல்லும் பா.ரஞ்சித், ஜாதிக்கட்சி தலைவருக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளதாக நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.