close
Choose your channels

சரவணா ஸ்டோர் அண்ணாச்சி படத்தில் இணைந்த தேசிய விருது பெற்ற பிரபலம்!

Saturday, January 18, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சரவணா ஸ்டோர் அண்ணாச்சி என்று அழைக்கப்படும் லெஜண்ட் அருள் சரவணன் தற்போது ஒரு தமிழ் திரைப்படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் என்பதும் இந்தப் படத்தை ’உல்லாசம்’ படத்தை இயக்கிய ஜேடி ஜெர்ரி இயக்கி வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் சமீபத்தில் ரூபாய் 10 கோடி செலவில் ஒரு பாடல் காட்சியில் பிரமாண்டமாக படமாக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

லெஜண்ட் அருள் சரவணன் நடித்து வரும் இந்த படத்தில் பிரபு, விஜயகுமார், நாசர், விவேக், தம்பி ராமையா, மயில்சாமி, கோவை சரளா உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் பாடலாசிரியர் பா விஜய் அவர்கள் பாடல்களை எழுத உள்ளார். இந்த தகவலை பா விஜய் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். மேலும் லெஜண்ட் அருள்சரவணன் மற்றும் படத்தின் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் உடன் பா விஜய் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பல ஹிட் பாடல்களை எழுதிய பா.விஜய், கடந்த 2005ஆம் ஆண்டு ‘ஆட்டோகிராப்’ படத்தின் பாடலை எழுதியதற்காக தேசிய விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த படத்தின் பாடல்களும் ஹிட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.