கடற்கரை பாறையில் 'பாபநாசம்' நடிகை எஸ்தர் அனில்: வைரல் புகைப்படங்கள்! 

  • IndiaGlitz, [Tuesday,June 29 2021]

மோகன்லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவான ’த்ரிஷ்யம்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் தமிழில் ’பாபநாசம்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது என்பதும் தெரிந்ததே

’த்ரிஷ்யம்’ படத்தில் மோகன்லாலின் இளைய மகளாகவும் அதேபோல் ’பாபநாசம்’ படத்தில் கமல்ஹாசனின் இளைய மகள் ஆகவும் நடித்திருந்தவர் 19 வயது எஸ்தர் அனில் என்பது தெரிந்ததே. இவர் ’த்ரிஷ்யம்’ படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்து உள்ளார் என்பதும் விரைவில் உருவாக உள்ள ’பாபநாசம்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் எஸ்தர் அனில் தற்போது தெலுங்கில் உருவாகி வரும் ’த்ரிஷ்யம் 2’ படத்தில் நடித்து வருகிறார் என்பதும், அதுமட்டுமின்றி ‘ஜாக் அண்ட் ஜில்’ என்ற மலையாள திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் எஸ்தர் அனில் அவ்வப்போது தனது அழகிய மற்றும் கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வருவார். அந்த வகையில் சமீபத்தில் அவர் கடற்கரை ஓரங்களில் உள்ள பாறைகளில் கிளாமர் உடை அணிந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பதும் இந்த புகைப்படங்களுக்கு ஒரு லட்சத்திற்கும் மேல் லைக்ஸ்கள் கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது