'படைத்தலைவன்' படத்தை சொந்தமாக ரிலீஸ் செய்யும் விஜயகாந்த் குடும்பம்.. தேதியும் அறிவிப்பு..!


Send us your feedback to audioarticles@vaarta.com


கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடித்த "படைத்தலைவன்" என்ற திரைப்படம், மே மாதம் 23ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடைசி நேரத்தில் திடீரென ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்படுவதாகவும், புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில், தற்போது "படைத்தலைவன்" திரைப்படம் ஜூன் 13ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவித்துள்ள நிலையில், இந்த படத்தை விஜயகாந்த் குடும்பத்தினர் சொந்தமாகவே ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் அறிவித்துள்ளனர்.
விஜயகாந்த் சினிமாவில் பிரபலமான நடிகராக நடித்துக் கொண்டிருந்தபோது "கேப்டன் சினி கிரியேஷன்ஸ்" என்ற நிறுவனத்தை தொடங்கி, அதன் மூலம் பல வெற்றிப் படங்களை தயாரித்தார்.
இந்த நிறுவனம்தான் தற்போது "படைத்தலைவன்" என்ற திரைப்படத்தை ரிலீஸ் செய்யப் போவதாக அறிவிக்கப்பட்டது.
அன்பு இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையில் உருவான இந்த படம், சண்முக பாண்டியனுக்கு ஒரு திருப்புமுனை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
#NikilNews23
— Nikil Murukan (@onlynikil) June 7, 2025
Shanmughapandian Starring #PadaiThalaivan Tamilnadu Theatrical Rights acquired by #CaptainCineCreations @ShanmugaP_Actor
Releasing on #June13 pic.twitter.com/jPz5OgpTTy
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com