நீலப்புரட்சிக்கு வித்திட்டவர் நீரிலிருந்து சடலமாக மீட்பு..


Send us your feedback to audioarticles@vaarta.com


கடந்த மே 7 தேதியிலிருந்து காணாமல் போனதாக புகார் செய்யப் பட்ட விவசாய விஞ்ஞானி பத்மஸ்ரீ டாக்டர் சுப்பண்ண அய்யப்பன் கர்நாடகாவில் காவேரியில் இறந்த நிலையில் கண்டு பிடிக்கப் பட்டார். அவருடைய இரு சக்கர வாகனம் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் உள்ள சாய் ஆசிரமம் நதிக்கரையில் கிடந்தது. இது குறித்து காவல்துறை விசாரணையை மேற்கொண்டுள்ளது.
யார் இந்த டாக்டர் சுப்பண்ண அய்யப்பன்?
இந்தியாவின் 'நீலப் புரட்சியின்' முக்கிய சிற்பிகளில் ஒருவராக பரவலாக அங்கீகரிக்கப்பட்ட டாக்டர் அய்யப்பன், புதிய, சிறப்பான மீன் சாகுபடி முறைகளை உருவாக்கினார். அவரது பணி கிராமப்புற வாழ்வாதாரங்களை மேம்படுத்தியது, உணவு முறைகளை வலுப்படுத்தியது மற்றும் கடலோர மற்றும் உள் பிராந்தியங்களில் உற்பத்தித்திறனை அதிகரித்தது. இந்த மாபெரும் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில், இவருக்கு 2022 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ வழங்கப்பட்டது.
1955 ஆம் ஆண்டு கர்நாடகாவில் சாமராஜநகர் மாவட்டத்தில் உள்ள ஏலந்தூரில் பிறந்த டாக்டர் அய்யப்பன், 1975ல் பி.எஃப்.எச்ஸ்சி பட்டப் படிப்பையும், 1977ல் எம் எஃப் எஸ் சியையும் மங்களூரில் முடித்து பெங்களூருவிலுள்ள விவசாய அறிவியல் பல்கலைகழகத்தில் பி.ஹெச் டி பட்டமும் பெற்றார்.
பல வருடங்களாக, மீன்வளர்ப்பு மற்றும் விவசாயம் தொடர்பான டாக்டர் அய்யப்பனின் பணிவாழ்க்கை பல தலைமைப் பதவிகளைக் கொண்டது. புவனேஸ்வரில் உள்ள மத்திய நன்னீர் மீன்வளர்ப்பு நிறுவனம் (சிஐஎஃப்ஏ) மற்றும் மும்பையில் உள்ள மத்திய மீன்வள கல்வி நிறுவனம் (சிஐஎஃப்இ) ஆகியவற்றின் இயக்குநராக பணி யாற்றிய இவர், ஹைதராபாத்தில் உள்ள தேசிய மீன்வள முன்னேற்ற வாரியத்தின் (என்எஃப்டிபி) நிறுவனராகவும் இருந்தார், பின்னர் இந்திய அரசின் ஆராய்ச்சி மற்றும் வேளாண் கல்வித் துறையில் (டிஏஆர்இ) செயலாளர் பதவியை வகித்தார்.
பணிக் காலத்தின் இறுதியில், அவர் தேசிய சோதனை மற்றும் அளவுத்திருத்த ஆய்வக அங்கீகார வாரியத்தின் (NABL) தலைவராகவும், இம்பாலில் உள்ள மத்திய வேளாண் பல்கலைக்கழகத்தின் (CAU) துணைவேந்தராகவும் பணியாற்றினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Rhea Dhanya
Contact at support@indiaglitz.com