பாகிஸ்தான் நடிகரின் பாலிவுட் படத்திற்கு தடை.. மத்திய அரசுக்கு தமிழ் நடிகர் கண்டனம்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


பாகிஸ்தான் நடிகர் நடித்த பாலிவுட் திரைப்படம் மே ஒன்பதாம் தேதி வெளியாக இருந்த நிலையில் இந்த படத்திற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதற்கு தமிழ் நடிகர் ஒருவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் நடிகர் ஃபவத் கான் நாயகனாகவும் பாலிவுட் நடிகை வாணி கபூர் நடித்த ’அபிர் குலால்’ என்ற திரைப்படம் மே ஒன்பதாம் தேதி வெளியாக இருந்த நிலையில், இந்த படத்திற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து, பாகிஸ்தான் மீது பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், பாகிஸ்தான் பிரபலங்களின் யூடியூப் சேனலுக்கு தடை விதிக்கப்பட்டது.
அதேபோல், தற்போது பாகிஸ்தான் நடிகர் ஃபவத் கான் ஹீரோவாக நடித்த ’அபிர் குலால்’ படமும் இந்தியாவில் தடைசெய்யப்பட்டது. இதற்கு பெரும்பாலும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், தமிழ் மற்றும் தென்னிந்திய படங்களில் நடித்து வரும் பிரகாஷ்ராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
எந்த படத்தையும் தடை செய்வதை தான் எதிர்ப்பதாகவும், நல்ல படமாக இருந்தாலும் சரி, விளம்பர படமாக இருந்தாலும் சரி, அதை பார்க்க வேண்டுமா? வேண்டாமா? என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்றும், ஆபாச படம் அல்லது குழந்தைகள் மீதான வன்கொடுமை படத்தை தவிர, எந்த ஒரு திரைப்படத்தையும் அரசு தடை செய்ய முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
பிரகாஷ்ராஜின் இந்த கருத்துக்கு நேர்மறை மற்றும் எதிர்மறை கருத்துக்கள் பரவி வருகிறது. ஏற்கனவே ஷாருக்கான் படத்தில் தீபிகா படுகோனே காவிநிற பிகினியில் தோன்றியதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்த போது, அதற்கு பிரகாஷ்ராஜ் கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments