'வாத்தி கம்மிங்' பாடலுக்கு பாகிஸ்தானில் இருந்து வந்த வாழ்த்து!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான திரைப்படம் ’மாஸ்டர்’. இந்த படம் கோவிட் நேரத்திலும் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பதும் வசூல் அளவில் ரூபாய் 200 கோடிக்கு மேல் திரையரங்கிலும் ஓடிடியிலும் இந்த படம் வசூல் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற ’வாத்தி கம்மிங்’ என்ற பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டானது என்பதும் யூடியூபில் 200 மில்லியனுக்கும் மேலாக பார்வையாளர்கள் இந்த பாடலுக்கு கிடைத்து சாதனை புரிந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தமிழ் ரசிகர்கள் உள்பட இந்தியர்கள் மட்டுமின்றி பாகிஸ்தானில் இருந்தும் தற்போது வாத்தி கம்மிங் பாடலுக்கு வாழ்த்துக்கள் கிடைத்துள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ’அனிருத் அவர்களின் மேஜிக்கல் இசையை கேட்டு பிரமித்ததேன். பாகிஸ்தானை சேர்ந்த எனக்கு உங்களது மொழி புரியவில்லை, ஆனால் வாத்தி கம்மிங் பாடலின் எனர்ஜி எனக்கு மிகவும் பிடித்துள்ளது, என்னுடைய வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்துள்ளார். இதனை அடுத்து இந்திய எல்லை தாண்டி பாகிஸ்தானிலும் ’வாத்தி கம்மிங்’ பாடலுக்கு ரசிகர்கள் உள்ளார்கள் என்பது தெரியவந்து உள்ளது

இந்த நிலையில் அனிருத் தற்போது நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ’பீஸ்ட்’ படத்திற்கும் இசையமைத்து வருகிறார் என்பதும் ’மாஸ்டர்’ படத்தை போலவே இந்த படத்திற்கும் சூப்பர் ஹிட் பாடல்களை அவர் கொடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More News

கைக்குழந்தையாக ஷிவாங்கி: வைரல் வீடியோ

சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமாகி இருந்தாலும் ஷிவாங்கி மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்தது குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினியின் அண்ணன் தெரியும், அக்காவை இதுவரை பார்த்ததுண்டா? இதோ வைரல் புகைப்படம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதும் அவருடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரி என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறிப்பிட்ட நேரங்களில் ரயிலில் பயணிக்கலாம்....!தென்னக ரயில்வே அனுமதி....!

நிபந்தனைகளுடன் மின்சார ரயில்களில் பயணிக்க, தென்னக ரயில்வே அனுமதியளித்துள்ளது.

USக்கு ஒப்படைக்கப்பட வேண்டிய நபர் ஸ்பானிஷ் சிறையில் இறந்து கிடந்தார்… பகீர் பின்னணி?

அமெரிக்க போலீசாரால் தேடப்பட்டு வரும் குற்றவாளியும் மெக்காஃபி நிறுவனருமான ஜான் மெக்காஃபி(75) நேற்று ஸ்பானிஷ் சிறையில் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய அணியின் தேர்வு சரியா? படுதோல்விக்குப் பிறகு விளக்கம் அளித்த கிரிக்கெட் கேப்டன்!

உலகக்கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 2 ஸ்பின் பந்து பவுலர்கள் இடம்பெற்றது குறித்துத் தற்போது