சுதந்திர போராட்ட வீரரின் தாக்குதல்: பாகிஸ்தான் ஊடகம் செய்தி

  • IndiaGlitz, [Saturday,February 16 2019]

காஷ்மீரில் உள்ள புல்வாமா பகுதியில் நடந்த தாக்குதலால் 44 இந்திய வீரர்களை இழந்த இந்தியா கடும் கோபத்தில் உள்ள நிலையில் பாகிஸ்தான் பத்திரிகை ஒன்று இந்த தாக்குதல் சுதந்திர போராட்ட வீரர்களின் தாக்குதல் என்று செய்தி வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானைச் சேர்ந்த ‘தி நேஷன்’ என்ற ஊடகம் 'இது சுதந்திர போராட்ட வீரரின் தாக்குதல்' என்ற சர்ச்சைக்குரிய தலைப்புடன் செய்தி ஒன்று வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை விடுதலைப் போராட்ட வீரர்கள் என அந்த பத்திரிகை குறிப்பிடப்பட்டுள்ளது மட்டுமின்றி இந்தியா போன்ற நாடுகள் இந்த விடுதலைப் போராட்டத்துக்கு தீவிரவாதச் சாயல் பூசுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் இன்னும் சில பத்திரிகைகள் இந்தியா ஆக்கிரமித்துள்ள நாட்டில் குண்டுவெடிப்பு, இந்திய வீரர்கள் பலி என்றும் செய்திகள் வெளியிட்டு வருகின்றன. பாகிஸ்தான் ஊடகங்களின் இந்த போக்கினை உலகநாடுகள் கண்டித்து வருகின்றன.

More News

'பொன்னியின் செல்வன்' படத்தில் இருந்து விலகினாரா விஜய்சேதுபதி?

அமரர் கல்கி எழுதிய காலத்தால் அழியாத காவிய படைப்பான 'பொன்னியின் செல்வன்' வரலாற்று நாவலை பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ளதாகவும்,

விஜய் ஒரு பிறவி டான்ஸர்: அஜித் பாராட்டு

சமூக வலைத்தளங்களில் அஜித், விஜய் ரசிகர்கள் மோதாத நாள் இல்லை என்பதும் இந்த இரு நடிகர்களின் ரசிகர்கள் மோதலால் சமூக வலைத்தளங்கள் எப்போதும் பரபரப்பில் இருக்கும்

வீரமரணம் அடைந்த வீரரின் உடல் வருவதற்குள் காப்பீட்டு தொகையை அளித்த எல்.ஐ.சி

நேற்று முன் தினம் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புலாவா பகுதியில் தற்கொலைப்படை தீவிரவாதிகளின் பயங்கர தாக்குதலுக்கு சி.ஆர்.பி.எப் வீரர்கள் 44 பேர் வீரமரணம் அடைந்தனர்.

திடீரென மதம் மாறிய டி.ராஜேந்தர் மகன்

நடிகர், இயக்குனர், உள்பட பல அவதாரங்களில் ஜொலித்து வரும் டி.ராஜேந்தர் சமீபத்தில் மீண்டும் தீவிர அரசியலில் இறங்கியுள்ளார். வரும் பாராளுமன்ற தேர்தலில் அவரது கட்சி போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷின் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் சென்சார் தகவல்

தனுஷ் நடித்த 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் அனைத்து பணிகளும் முடிந்துவிட்டதாகவும், இந்த படம் சென்சாருக்காக விண்ணப்பிக்கப்பட்டதாகவும் நேற்று தயாரிப்பாளர் கூறிய செய்தியை பார்த்தோம்.