போரே வந்தாலும் பாகிஸ்தான் கலந்து கொள்ளாது.. கடந்த கால தவறுகளை சரிசெய்து கொள்கிறோம்..!

  • IndiaGlitz, [Friday,January 10 2020]

அமெரிக்கா மற்றும் இரான் ஆகிய நாடுகளுக்கிடையே பிரச்னைகள் நிலவி வருகின்றன. இரு நாடுகளும் அறிவிக்கும் முடிவுகள் தொடர்பாகவும் பிரச்னைகள் தொடர்பாகவும் உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் தங்களது கருத்துகளைக் கூறி வருகின்றனர். இந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் இந்தப் பிரச்னை தொடர்பாக தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

இதுதொடர்பாக பேசிய அவர், ''இரான் மற்றும் சவுதி அரேபியாவின் நட்புறவை மீட்டெடுக்க பாகிஸ்தான் முயற்சி செய்யும். அமெரிக்கா மற்றும் இரான் இடையே உள்ள வேறுபாடுகளைத் தவிர்க்க, பாகிஸ்தான் உதவி செய்யவும் தயாராக உள்ளது என்பதையும் அதிபர் ட்ரம்ப்பிடம் முன்வைத்துள்ளேன். போர்களில் இருந்து யாரும் வெற்றிபெறப் போவதில்லை. இப்போது, பாகிஸ்தான் போர்களை நடத்தாது. ஆனால், நாடுகளை ஒன்றிணைக்க முயலும்” என்று கூறியுள்ளார்.

இரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி அமெரிக்கவால் கொல்லப்பட்டதிலிருந்தே உலக நாடுகளில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், மற்ற நாட்டுப் பிரச்னைகளில் பாகிஸ்தான் பங்கு பெறாது என்ற தனது தீர்மானத்தை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், மத்திய கிழக்கு நாடுகளுக்கிடையேயான நெருக்கடியில் அவர்களுக்கு சமரசம் செய்யும் வாய்ப்பையும் பாகிஸ்தான் புதுப்பித்துக்கொள்கிறது என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுடனான தொலைபேசி உரையாடலின்போது அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹ்மது குரேஷி இந்தச் செய்தியை அவர்களுக்குத் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. செனட் சபை கூட்டத்தின்போதும், ''இஸ்லாமாபாத்தின் மண் வேறு எந்த நாட்டுக்கும் எதிராக பயன்படுத்தப்படாது” என்றும் கூறியிருக்கிறார் ஷா மெஹ்மது குரேஷி.

More News

‘Z’ பிரிவு, ‘Y’ பிரிவு பாதுகாப்பு குறித்த ஒரு விரிவான விளக்கம்

அரசியல் தலைவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்வது தற்போது மத்தியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் கடமையாகக் கருதப்படுகிறது.

திரும்பும் போது திறந்த கதவு.. காரில் இருந்து கீழே விழுந்த குழந்தை..! அதிர்ச்சி வீடியோ.

காரில் இருந்து குழந்தை ஒன்று தவறிவிழும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இன்று மாலை 6 மணிக்கு அனிருத் வெளியிடவுள்ள ரகசியம்!

பிக்பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண் நடித்த பியார் பிரேமா காதல்', 'இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்' ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தற்போது அவர் கசட தபற', 'தாராள பிரபு'

'பட்டாஸ்' ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம்!

இந்த ஆண்டு பொங்கல் விருந்தாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' மற்றும் தனுஷ் நடித்த 'பட்டாஸ்' ஆகிய திரைப்படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது என்பது ஏற்கனவே தெரிந்ததே

மகள்களை காப்பாற்ற கொள்ளையர்களாக மாறும் தந்தைகள்..!

அமெரிக்காவில் உள்ள பிலடெல்பியாவில் தன் குழந்தைக்கு உடல்நிலை சரி இல்லை என்று கூறி ஒருவர் மருந்தகத்தில் பணம் கொள்ளை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.