தரை இறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு விழுந்து நொறுங்கிய பாகிஸ்தான் விமானம்!!!

  • IndiaGlitz, [Friday,May 22 2020]

 

பாகிஸ்தானின் தெற்கு பகுதியான கராச்சியில் பயணிகள் விமானம் ஒன்று குடியிருப்பு பகுதிகளுக்குள் விழுந்து நொறுங்கியது. அந்த விமானத்தில் 99 பயணிகள் உட்பட 8 பணியாளர்கள் இருந்தாகவும் 11 பேர் உயிரிழந்து விட்டதாகவும் பாகிஸ்தான் அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர். லாகூரில் இருந்து வந்த பயணிகள் விமானம் கராச்சியின் ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டியது. இந்நிலையில் விமானம் தரை இறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக குடியிருப்பு பகுதிகளில் விழுந்து நொறுங்கி கரும் புகை மூட்டம் எழுந்ததாகவும் வீடியோக்கள் வெளியாகி இருக்கிறது.

விபத்துக்குள்ளான Airbus A320 விமானத்தை பாகிஸ்தான் இண்டர்நேஷனல் நிறுவனம் இயக்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் இருந்து கடும் புகையானது வெளியேறிக் கொண்டே இருப்பதாகவும் பயணிகள் உயிரோடு இருப்பதற்கு வாய்ப்புக் குறைவு எனவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது. பாகிஸ்தான் இராணுவ மீட்புக் குழு பயணிகளை மீட்பதற்கு கடுமையாக போராடி வருவதாகவும் கூறப்படுகிறது.இறந்தவர்களின் எண்ணிகை இன்னும் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.

அந்நாட்டில் கொரோனா ஊரடங்கு நீடிக்கப்பட்டள்ள நிலையில் கடந்த ஒரு வாரமாக உள்நாட்டு விமானம் இயக்கப்படுகிறது. பயணிகளின் நெருக்கத்தை தடுக்க குறைந்த எண்ணிக்கையிலான பயணிகள் மட்டுமே விமானத்தில் அனுமதிக்கப் படுகின்றனர். கடந்த 2016 ஆம் ஆண்டு வடக்கு பாகிஸ்தான் சித்ராலியின் வணிக விமான விபத்துக்குள்ளனாதால் 46 பயணிகள் கொல்லப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

More News

அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையே முற்றிவரும் வரும் சர்ச்சை!!! தற்போதைய நிலவரம் என்ன???

கடந்த 18 ஆம் தேதி உலகச் சுகாதார அமைப்பின் ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டம் நடந்து முடிந்தது

திரைப்பட படப்பிடிப்புக்கு அனுமதி எப்போது? அமைச்சர் கடம்பூர் ராஜு தகவல் 

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் திரைப்பட படப்பிடிப்பு நடைபெறவில்லை. அதேபோல் திரையரங்குகளும் இரண்டு மாதங்களுக்கு மேல் மூடப்பட்டுள்ளன

உள்ளாடையுடன் டூட்டி பார்த்த நர்ஸ்: மாடலாக வருமாறு பிரபல நிறுவனம் அழைப்பு

ரஷ்யாவின் மாஸ்கோவில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கொரோனா வார்டில் நர்ஸாக பணிபுரிந்த இளம்பெண் ஒருவர் உள்ளடை மட்டும் அணிந்து டூட்டி பார்த்தது

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்கள் எத்தனை பேர்?

தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்த தகவலை சற்றுமுன்  சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

மாஸ்க் அணிந்து ஷாலினியுடன் செல்லும் அஜித்: வைரலாகும் வீடியோ

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து தனிமனித இடைவெளி மற்றும் வீட்டுக்குள்ளேயே இருத்தல் ஆகியவற்றை கடைப்பிடிக்க வேண்டும்