close
Choose your channels

100 கிராம் போதைப்பொருள் வைத்திருந்த நடிகை கைது: பாஜக இளைஞரணியை சேர்ந்தவரா?

Saturday, February 20, 2021 • தமிழ் Comments

100 கிராம் போதைப் பொருள் வைத்திருந்த பாஜக இளைஞர் அணியைச் சேர்ந்தவரும் பிரபல நடிகையுமான ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கடந்த சில மாதங்களாக போதைப்பொருள் விவகாரத்தில் ஒருசில நடிகைகள் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் தற்போது கொல்கத்தாவில் பிரபல நடிகையும் பாஜக இளைஞர் அணியைச் சேர்ந்த ஒரு பமீலா கோஸ்வாமி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்
இவர் 100 கிராம் போதைப் பொருள் வைத்திருந்ததாக காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். மேலும் அவரது நண்பர் பிரபிர் குமார் தே என்பவரையும் போலீசார் கைது செய்து இருவரையும் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

ஏற்கனவே போதைப்பொருள் விவகாரத்தில் தென்னிந்திய நடிகைகள் ஒருசிலர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் தற்போது கொல்கத்தாவை சேர்ந்த ஒரு நடிகையும் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz