close
Choose your channels

ஒரே பேருந்தில் மதுரை-தஞ்சாவூர் செல்லும் 40 நடிகர் நடிகைகள்

Saturday, June 15, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சங்க தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருப்பதால் பாண்டவர் அணி, சுவாமி சங்கரதாஸ் அணி என இரண்டு அணிகளும் தீவிர பிரச்சாரத்தில் உள்ளனர். குறிப்பாக நடிகர் சங்கத்தில் நாடக நடிகர்கள் அதிகளவில் உறுப்பினர்களாக இருப்பதால் அவர்களுடைய வாக்குகளை கவரவே இரு அணியினர்களும் தீவிரமாக உள்ளனர்.

இந்த நிலையில் மதுரை, தஞ்சாவூர் பகுதியில் உள்ள நாடக நடிகர், நடிகைகளை நேரில் சந்தித்து வாக்கு கேட்க பாண்டவர் அணியை சேர்ந்த நாசர், விஷால், பிரசாந்த், மனோபாலா உள்பட 40 நடிகர், நடிகைகள் இன்று மதுரைக்கு ஒரே பேருந்தில் புறப்பட்டனர். அங்குள்ள நாடக நடிகர், நடிகைகளை சந்தித்துவிட்டு பின் அவர்கள் தஞ்சை செல்ல திட்டமிட்டுள்ளனர்.

கடந்த முறை பாண்டவர் அணியினர் வெற்றி பெற காரணமே நாடக நடிகர், நடிகைகள் ஒட்டுமொத்தமாக ஆதரவு கொடுத்ததுதான் என்று கூறப்படும் நிலையில் மீண்டும் அவர்களுடைய ஆதரவை பெற பாண்டவர் அணி களமிறங்கியுள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.