மீண்டும் பாண்டவர் அணி கையில் நடிகர் சங்கம்: வெற்றி கொண்டாட்டம்!

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த நிலையில் இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண நீதிமன்றம் தடை விதித்தது. இதனையடுத்து நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து இன்று காலை முதல் வாக்குகள் எண்ணப்பட்டன என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து பாண்டவர் அணி முன்னிலையில் இருந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சற்று முன் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் பாண்டவர் அணியில் உள்ள வேட்பாளர்கள் முழுமையாக வெற்றி பெற்றுள்ளனர்.

நடிகர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நாசர், பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஷால், பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்தி மற்றும் துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கருணாஸ் மற்றும் பூச்சி முருகன் ஆகியோர் வெற்றி பெற்றதை அடுத்து மீண்டும் பாண்டவர் அணியின் கைக்கு நடிகர் சங்கம் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடுவில் மீண்டும் பாண்டவர் அணி பொறுப்புக்கு வந்துள்ள நிலையில் நடிகர் சங்க கட்டிட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று விரைவில் திறப்பு விழா நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

படம் தோல்வி அடைந்ததால் ரூ.50 கோடியை தயாரிப்பாளரிடம் திருப்பி கொடுத்த நடிகர்!

பொதுவாக பெரிய நடிகரின் படங்கள் தோல்வி அடைந்தால் அந்த தயாரிப்பாளரை சமாதானப்படுத்துவதற்காக இன்னொரு திரைப்படம் நடித்துக் கொடுப்பதாக தான் நடிகர்கள் கூறுவார்களே தவிர வாங்கிய சம்பளத்தை திருப்பிக்

அரபிக்குத்து பாடலுக்கு செம ஆட்டம் போட்ட பிரபல குத்துச்சண்டை வீராங்கனை!

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' படத்தின் 2 வது பாடலான 'ஜாலிலோ ஜிம்கானோ' என்ற பாடல் வெளியாகிய போதிலும் முதலில் ரிலீசான அரபிக்குத்து பாடல் இன்னும் சமூக வலைத்தளங்களில்

பொய் சொன்னதற்காக மன்னிப்பு கேட்க மாட்டேன்: நடிகை மனிஷா யாதவ் வீடியோ வைரல்!

நடிகை மனிஷா யாதவ் நான் பிஸியாக இருந்ததாக பொய் கூறினேன் என்றும் ஆனால் அதற்காக மன்னிப்பு கேட்க மாட்டேன் என்றும் யோகா செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில்

மகேஷ்பாபு மகள் அறிமுகம்: 'தளபதி 66' படத்திலும் நடிப்பாரா?

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 66ஆவது திரைப்படத்தில் மகேஷ் பாபுவின் மகள் சித்தாரா அறிமுகம் ஆக இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது மகேஷ்பாபுவின் 'சர்காரு வாரி பாட்டா' என்ற திரைப்படத்தில்

அஜித்தின் 'வலிமை' டிஜிட்டல் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அஜித் நடித்த 'வலிமை' திரைப்படம் கடந்த மாதம் 24ஆம் தேதி வெளியான நிலையில் இந்த படத்தின் டிஜிட்டல் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி இருப்பதால் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.