close
Choose your channels

6வது திருமண நாளை கொண்டாடிய 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' குமரன்: அழகிய புகைப்படங்கள்!

Saturday, July 3, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல தொலைக்காட்சி தொடர்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் ’பாண்டியன் ஸ்டோர்’ தொடர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பது தெரிந்ததே. இந்த தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வருபவர் குமரன் என்றும் இவருக்கு ஜோடியாக நடித்த சித்ரா திடீரென மரணம் அடைந்ததை அடுத்து தற்போது அந்த கேரக்டரில் காவ்யா என்பவர் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குமரன் தற்போது தனது 6 வது திருமண நாளைக் கொண்டாடியுள்ளார். இதுகுறித்து புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் அவர் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. ரொமான்ஸ் போஸ் கொடுத்து குமரனும் அவரது மனைவி சுஹாசினியும் கருப்பு வெள்ளை மற்றும் கலரில் பதிவு செய்துள்ள புகைப்படங்களைப் பார்த்து ரசிகர்கள் ஏராளமானோர் கமெண்ட்ஸ் அளித்து வருகின்றனர் என்பதும் இந்த புகைப்படங்களுக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ்கள் கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகர் குமரன் மனைவி சுஹாசினியும் ஒரு தொலைக்காட்சி நடிகை என்பதும், அவர் ’கனா காணும் காலங்கள்’ உள்பட ஒருசில சீரியல்களிலும் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.