திடீரென ஜெயிலுக்கு போன 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' நடிகை சுஜிதா.. வைரல் வீடியோ..!


Send us your feedback to audioarticles@vaarta.com


விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' உள்பட பல சீரியல்களிலும் சில திரைப்படங்களிலும் நடித்த நடிகை, அந்தமான் தீவில் உள்ள சிறைச்சாலையை பார்வையிட சென்ற வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாக்யராஜ் நடித்த 'முந்தானை முடிச்சு' திரைப்படத்தில் கைக்குழந்தையாக நடித்தவர் நடிகை சுஜிதா. குழந்தை நட்சத்திரமாக ஏராளமான படங்களில் நடித்த அவர். பின்னர் சில திரைப்படங்களிலும் பல டிவி சீரியல்களிலும் நடித்து வந்தார். குறிப்பாக, 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' முதல் சீசன் அவருக்கு மிகப்பெரிய பெயரையும் புகழையும் பெற்றுத்தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சுஜிதா, ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை வைத்திருக்கிறார். தனது ரசிகர்களுக்காக அவ்வப்போது புகைப்படங்களையும் வீடியோக்களையும் அதில் பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில், தற்போது அந்தமான் தீவில் உள்ள பழம்பெரும் சிறைச்சாலைக்கு ஒரு நாள் சுற்றுலா சென்றுள்ளார். அங்கு எடுத்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், அவர் சிறை கம்பிகளுக்கு இடையே நிற்பது போலவும், தூக்கு தண்டனை நிறைவேற்றும் இடத்தை பார்வையிடும் காட்சிகளும் உள்ளன.
அவருடன் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அந்த சிறைச்சாலையை பார்வையிட்டனர். இந்த வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்ட நிலையில், ஆயிரக்கணக்கான லைக்குகள் குவிந்து கொண்டிருக்கின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments