close
Choose your channels

'பாண்டியன் ஸ்டோர்' நடிகைக்கு வளைகாப்பு: வைரலாகும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் வாழ்த்து

Thursday, August 27, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி அனைவரையும் கவர்ந்த சீரியலான பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மீனா என்ற கேரக்டரில் நடித்து வருபவர் நடிகை ஹேமா என்பதும் இவர் இந்த சீரியலில் முதல் தம்பிக்கு ஜோடியாக நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் தற்போதைய கதையின்படி சீரியலில் இவர் கர்ப்பமாக இருக்கிறார் என்பதும், அதே நேரத்தில் சீரியலில் கர்ப்பமாக இருக்கும் நடிகை ஹேமா நிஜத்திலும் கர்ப்பமாக இருக்கிறார் என்பது குறித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் சமீபத்தில் நடிகை ஹேமாவுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. நேற்று எளிமையான முறையில் நடந்த வளைகாப்பு குறித்த புகைப்படங்களை ஹேமா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுட்டுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்து வருபவர்கள் உள்பட பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக சீரியலில் குட்டி அண்ணி என்று கலாய்த்து கொண்டிருப்பவர் நேரில் சென்று வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

ஹேமா பதிவு செய்த வளைகாப்பு புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும் இவருக்கு வாழ்த்து மழை பொழிந்து கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் பல ரசிகர்கள் ’பார்த்து கவனமாக இருந்து கொள்ளுங்கள்’ என்று அறிவுரையும் கூறி வருகின்றனர்.

தனக்கு குழந்தை பிறக்கவிருப்பது குறித்து ஹேமா கூறியபோது, ‘எனக்கு எந்த குழந்தை பிறந்தாலும் ரொம்பவும் சந்தோஷம் என்றும் என் குழந்தை பூமிக்கு வரும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.