close
Choose your channels

சீரியல் நடிகரை திருமணம் செய்து கொண்ட 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' நடிகை!

Friday, May 14, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் நடித்த நடிகை ஒருவர் சீரியல் நடிகர் ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்பது தெரிந்ததே. அண்ணன் தம்பிகள் பாசம் மற்றும் குடும்ப செண்டிமெண்ட் கதையம்சம் கொண்ட இந்த சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் கவிதா கவுடா என்ற நடிகை நடித்து வந்தார்.

இந்த நிலையில் இவருக்கு பிக்பாஸ் கன்னடம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்ததை அடுத்து அவர் ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து விலகினார். இவர் நடித்த மீனா கேரக்டரில் தற்போது ஹேமா ராஜ்குமார் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’லட்சுமி பிரபா’ உள்பட ஒரு சில தொடர்களில் நடித்து வரும் சந்தனகுமார் என்பவரை நடிகை கவிதா சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது, சந்தனகுமார்-கவிதா திருமணம் குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.