3 மாதங்களில் 3 படங்கள் ரிலீஸ்? சாதனை செய்வாரா பாண்டியராஜ்?

  • IndiaGlitz, [Saturday,November 07 2015]

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் பணி காரணமாக கடந்த சில நாட்களாக படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் இருந்த விஷால், தற்போது முழூவீச்சில் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருப்பதாகவும், தற்போது அவர் நடித்து வரும் 'கதகளி' படம் வரும் பொங்கல் தினத்தில் ரிலீசாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

'பசங்க' பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கேதரின் தெரசா நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் நாசர், சூரி, உள்பட பலர் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் தமிழா இசையமைக்கும் இந்த படத்தை விஷால்-பாண்டியராஜ் இணைந்து தயாரித்து வருகின்றனர்.

முதலில் இந்த படம் டிசம்பர் 18ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பாண்டியராஜ் இயக்கிய மற்றொரு படமான சூர்யாவின் 'பசங்க 2' நவம்பர் இறுதியில் வெளியாவதால், இந்த படம் பொங்கலுக்கு தள்ளிபோயுள்ளதாக கூறப்படுகிறது.

பாண்டியராஜ் இயக்கிய மூன்று படங்கள் தொடர்ச்சியாக மூன்று அடுத்தடுத்த மாதங்களில் ரிலீஸ் ஆக வாய்ப்பு உள்ளது. அதாவது 'பசங்க' நவம்பரிலும், 'இது நம்ம ஆளு' டிசம்பரிலும், 'கதகளி' ஜனவரியிலும் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

விஜய் 59: விஜய்யுடன் ஜோடி சேரும் மலையாள பெண்?

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 59' படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது....

பிரசாந்தின் 'சாஹசம்' படத்தின் சென்சார் விபரங்கள்

கடந்த 90கள் மற்றும் 2000ஆம் ஆண்டுகளில் பல சூப்பர் ஹிட் கொடுத்த முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் பிரசாந்த்துக்கு கடந்த 2011ஆம்...

சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் சிவகார்த்திகேயன் படப்பிடிப்பு

சிவகார்த்திகேயன் நடித்து முடித்த 'ரஜினிமுருகன்' ரிலீஸ் குறித்து எந்தவித அதிகாரபூர்வ தகவல்களும் வெளிவராத நிலையில் அவருடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கிவிட்டது...

'வேதாளம்' வெற்றிக்காக அஜீத்தின் ஆலய விசிட்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த தன்னுடைய ஒவ்வொரு படத்தின் ரிலீஸுக்கு முன்னர் திருப்பதி சென்று ஏழுமலையானை...

அமெரிக்க தொழில்நுட்பத்தை இந்தியா கொண்டு வரும் கமல்

உலக நாயகன் கமல்ஹாசன் இன்று தனது 61வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலகினர் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்...