close
Choose your channels

பிரபல இயக்குனரின் பாராட்டை பெற்ற விஷாலின் 'துப்பறிவாளன்'

Wednesday, September 13, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஷால் நடித்த துப்பறிவாளன்' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளிவரவுள்ள நிலையில் இந்த படத்திற்கு பிரபல இயக்குனர்களின் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இயக்குனர் லிங்குசாமி 'துப்பறிவாளன்' படத்தை பார்த்துவிட்டு பாராட்டினார் என்று வெளிவந்த செய்தியை காலையில் பார்த்தோம். இந்த நிலையில் 'பசங்க' உள்பட பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் பாண்டியராஜ் தனது சமூக வலைத்தளத்தில் துப்பறிவாளன்' படக்குழுவினர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்

துப்பறிவாளன்' ஒரு மிகச்சிறந்த துப்பறியும் த்ரில்லர் படம். ஆக்சன் காட்சிகள் உச்சகட்டமாக உள்ளது. விஷால் மற்றும் மிஷ்கின் ஆகியோர்களுக்கு இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கின்றேன்' என்று பாண்டிராஜ் கூறியுள்ளார்.

விஷால்-மிஷ்கின் கூட்டணியில் உருவாகியுள்ள இந்த துப்பறியும் படம் வெற்றி பெற்றால் மேலும் இதே போன்ற படங்கள் அதிகம் கோலிவுட்டில் தயாராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.