ஓபிஎஸ் ஆதரவாளர் திடீர் கைது. முதல்வரின் முதல் அதிர்ச்சி நடவடிக்கை

  • IndiaGlitz, [Friday,February 17 2017]

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே அரசியல் குழப்ப நிலை இருந்த காரணத்தால் மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகள் அனைத்தும் தேங்கி இருந்தன. புதிய முதல்வர் நேற்று பதவியேற்றதால் இனிமேலாவது மக்கள் பணிகள் தொய்வின்றி நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சமி தலைமையிலான ஆட்சியின் முதல் நடவடிக்கையாக பன்னீர்செல்வம் அணியில் இருக்கும் மதுரையை சேர்ந்த அதிமுக முன்னாள் மாநகராட்சி மண்டல தலைவர் சாலைமுத்து என்பவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக வாக்காளர் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடத்த இருந்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அவர்களின் வீட்டை காலி செய்யும்படி பொதுப்பணித்துறையில் இருந்து நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறப்படும் நிலையில் தற்போது அவரது ஆதரவாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதால் ஆட்சி அமைத்த பின்னரும் கோஷ்டி சண்டை போட்டுக்கொண்டிருப்பதாக பொதுமக்கள் புலம்பி வருகின்றனர்.

More News

ஒரே நாளில் பழிவாங்கும் படலம். நாலரை வருடங்களில் என்னென்ன நடக்குமோ?

தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு தமிழகத்தில் ஆற்ற வேண்டிய முக்கிய பணிகள் ஆயிரக்கணக்கில் காத்திருக்கும் நிலையில் முதல் நாளிலேயே தனது பழிவாங்கும் படலத்தை ஆரம்பித்துவிட்டதாக கூறப்படுகிறது....

சிவகார்த்திகேயனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

தொலைக்காட்சியில் இருந்து திரையுலகிற்கு வந்து ஐந்தே வருடங்களில் பத்தே படங்களில் மட்டும் நடித்து ஒரு நடிகர் முன்னணி நடிகர் பட்டியலில் இணைந்துவிட்டார் என்றால் நம்புவதற்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும்

எனது அடுத்த படத்தில் சசிகலாவின் உண்மை முகம். பிரபல இயக்குனர்

உண்மை நிகழ்வுகளையும் சர்ச்சைக்குரிய பிரச்சனைகள் குறித்தும் திரைப்படம் எடுக்கும் பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா, சசிகலா குறித்து ஒரு திரைப்படம் இயக்கவுள்ளதாக தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்...

சிவகார்த்திகேயன் படத்திற்கு ரஜினி பட டைட்டிலா?

இன்று பிறந்த நாள் கொண்டாடி வரும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில், ஜெயம் ராஜா இயக்கத்தில் அவர் நடித்து வரும் படத்தின் டைட்டில் இன்று மதியம் 12 மணிக்கு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது...

தமிழ்நாட்டில் இப்போதுதான் பிரச்சனை தொடங்கியுள்ளது. நடிகை ஸ்ரீபிரியா

தமிழகத்தின் 13வது முதல்வராக நேற்று எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றார். அவருடன் சேர்ந்து 31 அமைச்சர்களும் பதவியேற்றனர். நாளை கூடவுள்ள சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் அவர் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்...