ஆட்சி அமைப்பது யார்? தமிழகத்தில் அடுத்து என்னென்ன வாய்ப்புகள். ஒரு அலசல்

  • IndiaGlitz, [Wednesday,February 15 2017]

தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலமின்றி அப்பல்லோவில் அட்மிட் ஆனதில் இருந்து ஆரம்பித்த குழப்பம் இன்று வரை முடிவு தெரியாமல் நீண்டுகொண்டே உள்ளது. குறிப்பாக முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் ஜெயலலிதா நினைவிடத்தில் தியானம் செய்ய ஆரம்பித்த நிமிடம் முதல் இன்று வரை பரபரப்புக்கு பஞ்சமில்லை.
நேற்று வரை சசிகலாவா? ஓபிஎஸ் அவர்களா? என்று இருந்த போட்டி, தீர்ப்புக்கு பின்னர் பழனிசாமியா? பன்னீரா? என்று மாறிவிட்டது. இந்த குழப்பத்திற்கு முடிவு காண வேண்டிய கவர்னரின் அதிகப்படியான மெளனம் நடுநிலையாளர்களுக்கு கூட சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சிறைக்கு செல்லும் முன்னர் கட்சிக்கு டிடிவி தினகரன் என்றும் ஆட்சிக்கு எடப்பாடி பழனிச்சாமி என்றும் கைகாட்டிவிட்டு சென்றுள்ளார் சசிகலா. சசிகலா ஆதரவு எடப்பாடி பழனிச்சாமிக்கு 120 எம்.எல்.ஏக்களின் ஆதரவு உண்டு என்று கூறப்பட்டாலும், அவர்களை சிறையில் இருந்து விடுதலை செய்தால் எத்தனை பேர் ஓபிஎஸ் அணிக்கு செல்வார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.
அதே நேரத்தில் 12 எம்.எல்.ஏக்களின் ஆதரவை மட்டுமே வைத்துள்ள ஓபிஎஸ், ஆட்சி அமைக்க தேவையான இன்னும் 106 எம்.எல்.ஏக்களை திரட்டுவாரா? என்ற சந்தேகமும் உள்ளது. ஆனாலும் எம்.எல்.ஏக்கள் புத்திசாலிகளாக இருந்தால் அடுத்து வரும் நான்கு வருடங்களுக்கு பதவியை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்திற்காவது நிச்சயம் யாராலும் ஒருவரை ஒட்டு மொத்தமாக ஆதரிப்பார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
சிறை வைக்கப்பட்டுள்ள 100க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்களுக்கு தற்போது இரண்டே வழிகள் தான் உள்ளது. ஒன்று பழனிச்சாமி? இரண்டாவது ஓபிஎஸ். எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு கொடுத்து அவரை முதல்வராக்கினால் உண்மையில் அவர் முதல்வராக இருக்க வாய்ப்பே இல்லை. சசிகலாவால் மீண்டும் கட்சிக்குள் வரவழைக்கப்பட்ட டிடிவி தினகரனின் ஆதிக்கமே அதிகம் இருக்கும். முதல்வரானால் எடப்பாடியால் தனித்து இயங்க முடியுமா? என்பது சந்தேகமே. மன்னார்குடி ஆட்கள் அவரை தனித்து இயங்க வைக்க வாய்ப்பு இல்லை. முதல்வருக்கே அப்படி ஒரு நிலை என்றால் எம்.எல்.ஏக்களின் நிலை குறித்து சொல்ல வேண்டியதே இல்லை.
அதே நேரத்தில் ஓபிஎஸ் பக்கம் ஆதரவு அளித்தால் அனைவரையும் அனுசரித்து போகும் ஓபிஎஸ், எம்.எல்.ஏக்களையும் அனுசரித்து போவார். சுதந்திரமாகவும் செயல்படலாம். மேலும் மத்திய அரசின் முழு ஒத்துழைப்பும் மாநில அரசுக்கு கிடைக்கும் என்பதால் ஆட்சிக்கு நல்ல பெயர் வர வாய்ப்பு உண்டு. அந்த நல்ல பெயர் அடுத்த தேர்தலின்போது மக்களை சந்திக்க உதவும்.
ஓபிஎஸ், மற்றும் பழனிச்சாமி இருவரும் தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க தவறினால் முன்றாவது வாய்ப்பாக திமுகவுக்கு கவர்னர் வாய்ப்பு கொடுக்கும் ஒரு நிலை உள்ளது. இந்த முடிவை கவர்னர் எடுப்பாரா? என்பதே கேள்விக்குறியாக இருந்தாலும், அப்படியே வாய்ப்பு கொடுத்தாலும் திமுக அதை ஏற்குமா? என்பது சந்தேகம்தான். கூட்டணி கட்சிகளுடன் சேர்த்து 98 எம்.எல்.ஏக்களை மட்டுமே வைத்துள்ள திமுக, ஆட்சி அமைக்க வேண்டுமானால் அதிமுக எம்.எல்.ஏக்களிடம்தான் செல்ல வேண்டும்,. அதனால் திமுக ஆட்சி அமைப்பது சந்தேகமே.
கடைசியாக யாரும் ஆட்சி அமைக்க முடியாவிட்டால் கவர்னருக்கு இருக்கும் அடுத்த வழி 355 மற்றும் 356தான். 355 பிரிவின்படி சட்டசபையை ஆறு மாதமோ அல்லது அதற்கு மேலோ முடக்கி வைத்து அதற்குள் மெஜாரிட்டியை யாராவது நிரூபிப்பார்களா? என்று காத்திருக்கலாம். இல்லை என்றால் கவர்னருக்கு இருக்கும் அடுத்த வழி அரசை கலைத்துவிட்டு தேர்தல் நடத்த ஆணையிடுவதுதான்.
பழனிச்சாமி, பன்னீரா அல்லது தேர்தலா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

எடப்பாடி பழனிச்சாமிக்கு நட்ராஜ் எம்.எல்.ஏ ஆதரவு

முன்னாள் காவல்துறை அதிகாரியும், மைலாப்பூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏவுமான நட்ராஜ், எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு கொடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

தினகரன் பொதுச்செயலாளரா? அதிமுக அமைப்பு செயலாளர் பதவி விலகல்

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தான் சிறையில் இருக்கும்போது கட்சியை கட்டுக்கோப்பாக வைத்திருக்க டிடிவி தினகரனை அதிமுகவின் துணைப்பொதுசெயலாளராக நியமனம் செய்தார்.

சசிகலா: ஜெ. நினைவிடத்தில் சபதம். எம்.ஜி.ஆர் இல்லத்தில் தியானம்.

சுப்ரீம் கோர்ட் உத்தரவை அடுத்து பெங்களூர் கிளம்பிவிட்ட அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, அதற்கு முன்னதாக முன்னாள் முதல்வரும் தனது தோழியுமான ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு பின்னர் சபதம் ஏற்றார்.

சசிகலா செய்த சபதம் என்ன? கோகுல இந்திரா விளக்கம்

உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து பெங்களூர் நீதிமன்றத்தில் சரண் அடைய சற்று முன் கிளம்பிய அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா ஜெயலலிதா நினைவிடம் சென்று அங்கு அவருடைய சமாதி முன் கையால் ஓங்கி அடித்து சபதம் ஏற்றார்...

சசிகலா மீது ஆள்கடத்தல் வழக்கு. கைது செய்யப்படுவாரா?

ஜெயலலிதா சமாதி மீது சபதம் செய்துவிட்டு பெங்களூர் சிறையை நோக்கி அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா சென்று கொண்டிருக்கும் நிலையில் அவர் மீது இன்னொரு வழக்கு புதியதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.