பரவை முனியம்மா உடல்நிலை குறித்து அப்டேட் தந்த தமிழ் நடிகர்

  • IndiaGlitz, [Tuesday,November 05 2019]

விக்ரம் நடித்த ‘தூள்’ படத்தில் இடம்பெற்ற ‘சிங்கம் போல நடந்து வரான் செல்ல பேராண்டி...’ என்ற பாடல் மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமான பரவை முனியம்மா அந்த படத்தின் வெற்றிக்குபின் சுமார் 80 படங்களில் நடித்தார். நூற்றுக்கணக்கான கிராமிய பாடல்கள், சினிமா பாடல்களை பாடிய இவர் மதுரை மாவட்டம் பரவை என்ற ஊரை சேர்ந்தவர் என்பதால் ‘பரவை முனியம்மா’ என இவர் அழைக்கப்படுகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் பரவை முனியம்மாவுக்கு சமீபத்தில் உடல்நலக்கோளாறு ஏற்பட்டதால் மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரவை முனியம்மாவுக்கு நடிகர் சங்கமும், தமிழக அரசும் நிதியுதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்த நிலையில் நடிகர் அபி சரவணன் முயற்சியால் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் ஐசரி கணேஷ், பரவை முனியம்மாவின் முழு மருத்துவ செலவையும் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார்.

இந்த நிலையில் பரவை முனியம்மாவில் உடல்நிலை குறித்து நடிகர் அபி சரவணன் கூறியபோது, பரவை முனியம்மா பாட்டி நலமுடன் வீடு திரும்பினார். இலவச மருத்துவம் பார்த்த வேலம்மாள் மருத்துவ நிர்வாகத்திற்கும், அதற்காக மருத்துவமனையை தொடர்ப்பு கொண்டு உதவிய ஜசரி கணேஷ் மற்றும் நடிகர் சங்கத்தின் அனைத்து பொறுப்பாளர்களுக்கும் மற்றும் அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார். பரவை முனியம்மா நலமுடன் வீடு திரும்பிய செய்தி அவரது குரல்களுக்கு ரசிகர்களாகிய அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தியே.
 

More News

கமல்ஹாசனுக்கு அதிர்ச்சி கொடுத்த மூன்று பிரபலங்கள் 

உலகநாயகன் கமலஹாசன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 'மக்கள் நீதி மையம்' என்ற கட்சியை தொடங்கினார் என்பது அனைவரும் அறிந்ததே. அக்கட்சி கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பாராளுமன்ற

முன்னணி நிறுவனத்தின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

கோலிவுட் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளில் அடுத்தடுத்து வெற்றிகளை பெற்றுவரும் நிறுவனம் என்பது தெரிந்த்தே.

தர்பார்' படத்திற்காக ஒன்றுசேரும் இந்திய திரையுலகம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஆகியோர் நடிப்பில் பிரபல இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் 'தர்பார்'

சொந்த குடும்பத்து பெண்களையே ஆபாச படமெடுத்த இளைஞர் கைது!

காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒரு இளைஞன் சொந்த குடும்பத்தை பெண்கள் மற்றும் உறவுக்கார பெண்களையே ஆபாசமாக புகைப்படம் எடுத்து அவைகளை சமூகவலைதளத்தில்

விஜய்சேதுபதிக்கு ஜோடியாகும் தனுஷ்-சிம்பு பட நாயகி!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது ஒரே நேரத்தில் சுமார் அரை டஜன் படங்களுக்கு மேலாக நடித்து கொண்டு வரும் நிலையில், அவர் நடித்து வரும் படங்களில் ஒன்று 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'